கடுப்பானா இயக்குனரையே அடிப்பேன்… மாமன்னன் படப்பிடிப்பில் உதயநிதி செய்த சம்பவம்!..

by Rajkumar |   ( Updated:2023-06-25 00:08:29  )
கடுப்பானா இயக்குனரையே அடிப்பேன்… மாமன்னன் படப்பிடிப்பில் உதயநிதி செய்த சம்பவம்!..
X

இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் உதயநிதி. தமிழ் சினிமாவிற்கு வரும் பொழுது அவருக்கு பெரிதாக நடிக்க வரவில்லை, எனவே தொடர்ந்து ஒரு காமெடி கதாநாயகனாக தன்னை முன்னிலைப்படுத்தி தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்தார் உதயநிதி.

உதயநிதி நடிக்கும் பல திரைப்படங்களில் அவருடன் இணைந்து நடிகர் சந்தானமும் நடித்துக் கொண்டிருந்தார். இந்த காம்போ ஒரு வெற்றி காம்போவாக இருந்ததால் சந்தானத்திற்கும் இது நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.

udhayanithi

udhayanithi

அதன் பிறகு கெத்து திரைப்படத்தில் முதன்முதலாக கொஞ்சம் சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்தார் உதயநிதி. அந்த படத்திலும் மக்கள் மத்தியில் உதய்க்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.அதனைத் தொடர்ந்து கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மனிதன், நிமிர், கலக தலைவன், நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களில் நடித்தார்.

இந்த திரைப்படங்களில் எல்லாம் இவர் காமெடி கதாபாத்திரமாக இல்லாவிட்டாலும் கூட படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்சமயம் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் நடித்துள்ளார் நடிகர் உதயநிதி.

maamannan

maamannan

மாமன்னன் திரைப்படத்தைப் பொறுத்தவரை அந்த படத்தின் படப்பிடிப்பில் உதவி இயக்குனர் முதல் பலரையும் அடிப்பார் மாரி செல்வராஜ் என்று ஒரு பேச்சு இணையதளத்தில் வலம் வந்து கொண்டிருந்தது. இது குறித்து உதயநிதிடம் கேட்கும் பொழுது அவரெல்லாம் யாரையும் அடிக்க மாட்டார் கடுப்பானால் நாங்கள் தான் அவரை அடிப்போம் என்று கூறியுள்ளார். மேலும் மாரி செல்வராஜ் ஒரு குழந்தை போல அவர் சீரியஸாக இருக்க நினைத்தாலும் நாங்கள் இருக்க விட மாட்டோம் என்று அவர் கூறினார்.

Next Story