தமிழ்நாட்டை ஆறுமுறை ஆட்சி செய்த கருணாநிதியின் பேரன், இப்போதைய தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் மகன், திமுக இளைஞரணி செயலாளர், ஆளும் கட்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர், திரைப்பட தயாரிப்பாளர், நடிகர், வினியோகஸ்தர் என பல அடையாளங்களை கொண்டவர் உதயநிதி ஸ்டாலின்.
ஓகே ஓகே படத்தில் அறிமுகம்
முதலில் படங்களை தயாரித்த உதயநிதி ஸ்டாலின், ஒரு கட்டத்துக்கு பின் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். இவரது முதல் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி (ஓகே ஓகே) அதன்பிறகு பல படங்களில் நடித்தும், சில படங்கள் மட்டுமே, இவருக்கு ஹிட் படமாக அமைந்தது. குறிப்பாக உதயநிதி – சந்தானம் காமெடி காம்பினேஷன் சில படங்களில், ஒர்க் அவுட் ஆனது. திமுக சார்பில், சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ வான உதயநிதி, இப்போது அமைச்சராக இருக்கிறார்.
மாமன்னன் கடைசி படம்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வரும் மாமன்னன் படமே, தனது கடைசி படம், இனி சினிமாவில் நடிக்கப்போவது இல்லை என திட்டவட்டமாக ஏற்கனவே அறிவித்துவிட்டார் உதயநிதி.
ஆனால் முதல் படத்தில் நடித்த பின், இனி நடிக்க வேண்டாம். நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என முடிவெடுத்ததாக, உதயநிதியே ஒரு ஆச்சரியமான தகவலை பகிர்ந்து இருக்கிறார்.
முதல் படத்துடன் நடிப்புக்கு முற்றுப்புள்ளி
ஓகே ஓகே படத்தோட வெற்றி என்னை என்ன பண்ணுச்சுன்னா, ஓகே இந்த படமும், இந்த வெற்றியும். போதும். இதோட படத்துல நடிக்கறதை விட்டுடலாம். ஏன்னா, 100 சதவீதம் அந்த படம் தந்த வெற்றி எனக்கு நிறைவா இருந்துச்சு. ஏன்னா, எந்த ஹீரோவுக்கும் அந்த சக்சஸ் ரேட் இருக்காது.அதனால, இதோட நிறுத்திக்கலாம். ஒரு படம் பண்ணிட்டோம். அது ஹிட் ஆயிடுச்சு இனிமே நடிக்க வேணாமுன்னு முடிவு பண்ணிட்டேன். அதனால ஏழு மாசம் சும்மாவே இருந்தேன். தயாரிப்பு வேலைகளை மட்டும் பார்த்துக்கிட்டு இருந்தேன். ஏதாவது கதை கேட்பேன். இப்ப வேணாங்க, என தள்ளி போட்டு விடுவேன். ஒன்றரை வருஷம் கழிச்சுதான், இது கதிர்வேலன் காதல் படம் ஸ்டார்ட் ஆச்சு. ஆனா, அந்த படமும் சரியா போகல.
காமெடியா நடிச்சது போர் அடிச்சுது
அப்புறம் நண்பேன்டா படம் பண்ணினேன். எனக்கு ரொம்ப போர் அடிச்சிடுச்சு.காமெடின்னு நினைச்சு எதையோ பண்ணிக்கிட்டு, நானே சிரிச்சுக்கிட்டு இருந்தேன். அதுக்கு அப்புறம்தான் கொஞ்சம் சீரியஸ் கேரக்டர் பண்ண ஆரம்பிச்சேன், என்று கூறி இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
சுமார் 20 படங்கள் வரை ஹீரோவாக நடித்த நிலையில், உதயநிதி ஆளும்கட்சியில் அமைச்சரான பின்பு, முழுநேர அரசியல்வாதியாக மாறி விட்டார். சினிமாவுக்கு குட்பை சொன்னாலும் இன்னும் திரைப்பட தயாரிப்பாளராக, வினியோகஸ்தராக அவர் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…