கழக தலைவர் ஆகிறார் உதயநிதி.! சத்தியமா இது அரசியல் நியூஸ் இல்லைங்க...
நடிகர் , தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் தற்போது சினிமாவிலும், அரசியலிலும் மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறார். சினிமாவில் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் பல்வேறு திரைப்படங்களை வாங்கி தமிழகத்தில் ரிலீஸ் செய்து வருகிறார்.
உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் படத்தை ரிலீஸ் செய்தால், படத்திற்கு விளம்பரமும் நன்றாக இருக்கிறது. படத்தின் வசூல் கணக்கு வழக்குகளும், சரியாக இருக்கிறது. என்பதால் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் படத்தை விநியோகம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும், உதயநிதி ஸ்டாலின் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் மகிழ்திருமேனி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் உதயநிதி நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு தற்போது தலைப்பு தயார் செய்து வருகின்றனராம். இப்படத்துக்கு கழகத் தலைவன் என பெயர் வைத்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த தலைப்பை கேட்டதும் நெட்டிசன்கள் பல்வேறு விதமாக தங்கள் கருத்துக்களை கூற ஆரம்பித்துவிட்டனர்.
இதையும் படியுங்களேன் - அஜித் செய்த வேலையால் H.வினோத் எடுத்த அதிரடி முடிவு.! அங்கிருந்த மொத்த டீமும் எஸ்கேப்.?
சத்தியமாக இது அரசியல் நோக்கத்திற்காக வைக்கப்பட்டதாக இருக்காது என்கின்றனர் சிலர். இயக்குனர் மகிழ்திருமேனி கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்யும் இயக்குனர். ஆதலால், படத்தின் கதைக்கு இந்த தலைப்பு சரியாக இருக்கும் என்பதால், இந்த தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.