மோகன்ஜீக்கு கிடைச்ச மரியாதை கூட கிடைக்கலையே… விஜய் ஆண்டனி படத்தை அக்கடா என தூக்கிப்போட்ட உதயநிதி…
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை தனது ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டு வந்த உதயநிதி ஸ்டாலின், தற்போது அமைச்சராக பொறுப்பேற்றுள்ளதால், தனது நிறுவனத்தின் பெயரின் கீழ் தனது பெயரை போடுவதை நிறுத்திவிட்டார். மேலும் திரைப்படங்களில் நடிப்பதையும் நிறுத்திவிட்டார்.
எனினும் அவரது மனைவியான கிருத்திகா உதயநிதி, ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் பொறுப்பை எடுத்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் உதயநிதிதான் அந்த நிறுவனத்தில் எந்தெந்த திரைப்படங்களை வெளியிடலாம், எந்தெந்த திரைப்படங்களை வெளியிடக்கூடாது என்பதை முடிவு செய்வார் எனவும் தகவல்கள் வெளிவந்தன.
சமீபத்தில் மோகன் ஜீ இயக்கத்தில் வெளிவந்த “பகாசூரன்” திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சி வாங்கியிருந்ததை நம் அனைவரும் அறிவோம். இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான “இரத்தம்” திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை விற்க அத்திரைப்படத்தின் இயக்குனரான சி.எஸ்.அமுதன் உதயநிதியை அணுகியிருக்கிறார். ஆனால் அத்திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை உதயநிதி வாங்க மறுத்துவிட்டாராம்.
“இரத்தம்” திரைப்படத்தை இயக்கிய சி.எஸ்.அமுதன் திண்டுக்கல் லியோனியின் மருமகன் ஆவார். திண்டுக்கல் ஐ லியோனி திமுகவுக்கு ஆதரவானவர்.
இந்த நிலையில் இத்தகவலை பகிர்ந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளரான பிஸ்மி, “எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர்கள் கொள்கைக்கு மாறான ஒரு திரைப்படத்தை அவர்கள் வாங்குகிறார்கள். ஆனால் திமுக குடும்பத்தை சேர்ந்த ஒருவருடைய படத்தை வாங்க மறுத்துவிடுகிறார்கள்” என தனது வீடியோ ஒன்றில் குற்றசாட்டு வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இப்படி பப்ளிக்கா காயப்படுத்துறாங்களே!… மனம் குமுறி கதறிய எம்.எஸ்.பாஸ்கர்… என்ன நடந்து தெரியுமா?