
Cinema News
சம்பளத்தை குறைங்க., நல்ல படம் கிடைக்கும் – உதயநிதி.!? விஜய், அஜித், ரஜினிக்கு வலுக்கும் எதிர்ப்பு.!?
தமிழ் சினிமாவில் தற்போது ஒரு கெட்ட பழக்கம் உருவாகிவருகிறது என்றே கூறலாம். தங்களது படங்கள் திரையில் நன்றாக ஓடுகிறதோ இல்லையோ தங்களது சம்பளத்தை மட்டும் படத்திற்கு படம் ஹீரோக்கள் ஏற்றி கொண்டு செல்கின்றனராம். இதில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்களை, சொல்வதா? நடிகர்கள் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் அதனை கொடுத்து அவர்களை புக் செய்யும் தயாரிப்பாளர்களை சொல்வதா? என்று தமிழ் திரையுலகிற்கு தெரியவில்லை.
சொல்லப்போனால் ஒரு படத்தின் பட்ஜெட்டில் முக்கால்வாசி சம்பளமாக கொடுக்கப்பட்டு வருகிறதாம். மீதி காசில்தான் படம் எடுக்கும் சூழல் தற்போது தமிழ் சினிமாவில் நிலவி வருகிறதாம். அதன் காரணமாகத்தான் வெளிமாநிலங்களில் வெளிவந்த திரைப்படங்கள் கூட இங்கு நன்றாக ஓடுகிறது என்றும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இது குறித்து பிரபல தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கருத்து ஒன்றை தெரிவித்தார். அவர் கூறியதாவது, ‘அண்மையில் வெளியான கேஜிஎப் 2 திரைப்படத்தை பாருங்கள், அதில் ஹீரோவுக்கு எவ்வளவு சம்பளம் என்று தெரியாது. ஆனால், படத்தின் பட்ஜெட் பெரும்பாலும் படத்தை உருவாக்க செலவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், தமிழில் நான் பெயர் சொல்ல விரும்பவில்லை, பெரிய நடிகர்கள் அதிகமாக சம்பளம் வாங்குகிறார்கள். படத்தின் பட்ஜெட்டில் பெரும்பகுதி நடிகர்களின் சம்பளமாக கொடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் ஒருவேளை சம்பளத்தை குறைத்தால், தமிழ் சினிமாவிற்கு நல்ல பிரம்மாண்ட திரைப்படங்கள் கிடைக்கலாம்.’ என்பது போல தனது கருத்தை முன்வைத்தார்.
இதையும் படியுங்களேன் – நீங்க சொல்றது தப்பு.! அஜித் கொடுத்து கொடுத்து முடியாமல் தான் விட்டுட்டார்.! மேடையில் காரசார விவாதம்.!
பிரபல தயாரிப்பாளர் , விநியோகிஸ்தர் உதயநிதி ஸ்டாலினே, பெரிய நடிகர்களின் சம்பளம் பற்றி வெளிப்படையாக பேசி விட்டார் என்பது தற்போது கோலிவுட்டில் பேசுபொருளாக மாறி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது அதிக சம்பளம் வாங்குவது விஜய், ரஜினி, அஜித் போன்ற ஹீரோக்கள் தான். இவர்கள் சம்பளம் நூறு கோடியை தாண்டியதாக சினிமாவில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் தற்போது வலுத்து வரும் இந்த சம்பள விவகார கோரிக்கைகள், அந்தந்த நடிகர்களின் காதுகளில் கேட்டு ஒருவேளை சம்பளத்தை குறைப்பார்களா? அல்லது ரிலீஸ் செய்து படம் ஓடிய பின்னர் தங்களது சம்பளத்தை பெற்று கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.