சிவகார்த்திகேயனை கழட்டி விட்ட உதயநிதி ஸ்டாலின்!.. தனுஷ் படத்தை தூக்கி கொண்டாடிட்டாரு!..

Published on: January 13, 2024
---Advertisement---

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று வெளியான கேப்டன் மில்லர், அயலான், மிஷன் பார்ட் 1, மெரி கிறிஸ்துமஸ் உள்ளிட்ட படங்களில் கேப்டன் மில்லர் படத்தை பாராட்டி ட்வீட் போட்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

600 வருடங்களாக கோயிலுக்குள் ஒடுக்கப்பட்ட மக்களை உள்ளே விடவில்லை என படத்தில் வசனம் வரும். வெள்ளைக்காரனிடம் இருந்து சுதந்திரத்தை வாங்கி இந்த மகராஜாக்களுக்கத்தானே கொடுக்கப் போற என சிவ ராஜ்குமாரை பார்த்து தனுஷ் கேட்கும் வசனங்களும் படத்தின் ஆழத்தை உணர்த்தும்.

இதையும் படிங்க: பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மாஸ் காட்டிய தனுஷ்!.. கேப்டன் மில்லர் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?..

இந்நிலையில், நேற்று வெளியான படங்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அயலான் மற்றும் கேப்டன் மில்லர் படங்களில் சிவகார்த்திகேயன் படத்தை கழட்டி விட்டு தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை உதயநிதி ஸ்டாலின் பாராட்டி உள்ளார்.

”ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து கேப்டன் மில்லர் என்கிற அருமையானதொரு படைப்பை சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் தனுஷ், திரு. சிவராஜ்குமார், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இசை அமைப்பாளர் சகோதரர் ஜி.வி. பிரகாஷ் குமார், சத்ய ஜோதி நிறுவனம், பிரியங்கா மோகன், சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்புராயன், உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

இதையும் படிங்க: ரஜினி விஷயத்துல அவர் பண்ணது வேறலெவல்!.. அப்பவே ஸ்கெட்ச் போட்டு வேலை பார்த்த சிவகார்த்திகேயன்..

மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தை விடுதலைப் போராட்டக் கதைக்களத்தின் ஊடாக அழுத்தமாக பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர்.” என உதயநிதி ஸ்டாலின் பாராட்டி உள்ளார்.

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ஏலியன் படத்தை எடுத்த முயற்சியை ஏன் பாராட்டவில்லை என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். கடந்த ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படமும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகவே ஒலித்தது குறிப்பிடத்தக்கது.

 

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.