“நான் நல்லா நடிக்கிறேனா?”… இயக்குனரிடம் டவுட்டு கேட்ட உதயநிதி… அதுக்காக இப்படி ஒரு பதிலா வரணும்??

Udhayanidhi Stalin
உதயநிதி ஸ்டாலின் தற்போது “கலகத் தலைவன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் “தடையற தாக்க”, “தடம்” போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியவர்.

Udhayanidhi Stalin
“கலகத் தலைவன்” திரைப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் சமீபத்தில் வெளியானது. மேலும் இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
“கலகத் தலைவன்” திரைப்படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தற்போது “மாமன்னன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் உதயநிதியுடன் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் நடித்து வருகின்றனர். மாரி செல்வராஜ் இத்திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.
இதையும் படிங்க: உதவி கேட்டு வந்த நடிகரை வெகு நேரம் காக்க வைத்த அஜித்… ஆனால் அங்கதான் ஒரு டிவிஸ்ட்…

Udhayanidhi Stalin
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “மாமன்னன்” திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடைபெற்ற ஒரு சுவாரஸ்ய சம்பவம் குறித்து பகிர்ந்துகொண்டார்.
“ஏதோ தமிழ் சினிமாவை நான்தான் காப்பாற்றுகிறேன் என்பது போல் நடிப்பதை நிறுத்தாதீர்கள் என என்னிடம் பலரும் கூறிக்கொண்டே இருக்கிறீர்கள். ஆனால் நான் இன்னும் நடிக்கவே தொடங்கவில்லை. மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த 8 ஆவது நாள், நான் இயக்குனர் மாரி செல்வராஜிடம் நீங்கள் நினைக்குற மாதிரி நான் நடிக்கிறேனா என கேட்டேன்.

Mari Selvaraj
அதற்கு அவர் ‘எனக்கு தெரியல சார், இன்னும் பத்து நாள் கழிச்சி சொல்றேன்’ என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்” என உதயநிதி மிகவும் நகைச்சுவையோடு கூறினார். உதயநிதி இவ்வாறு கூறியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.