“டான் படம் பார்த்து சிரிப்பே வரல”… ப்ளு சட்டை மாறனாக மாறிய உதயநிதி… இவ்வளவு ஓப்பனாவா பேசுறது!!

by Arun Prasad |
Don movie
X

Don movie

கடந்த மே மாதம் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “டான்”. இத்திரைப்படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கியிருந்தார். சிவகார்த்திகேயனும் லைக்கா நிறுவனமும் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்திருந்தனர். மேலும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் இத்திரைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

சமீப காலமாக பல பேட்டிகளில் கலந்துகொண்டு வரும் உதயநிதி ஸ்டாலின், வெளிப்படையாக பல விஷயங்களை பேசி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் “கேப்டன்” திரைப்படம் குறித்து மிகவும் நகைச்சுவையுடன் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.

Udhayanidhi Stalin

Udhayanidhi Stalin

இந்த நிலையில் சமீபத்தில் பிரபல Food Vlogger இர்ஃபானுடன் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார் உதயநிதி. அப்போது “எதாவது ஒரு திரைப்படம் உங்களுக்கு பிடிக்காமல் போய் அதன் பின் ரசிகர்கள் கொண்டாடியிருக்கிறார்களா?” என உதயநிதியிடம் கேட்கப்பட்டது.

அதற்கு உதயநிதி “சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்தை வெளியிடுவதற்கு முன்பு நான் எனது வீட்டில் திரையிட்டு பார்த்தேன். அப்போது என்னுடன் சேர்ந்து எனது நண்பர்களும் பார்த்தார்கள். அந்த திரைப்படத்தில் வரும் நகைச்சுவை காட்சிகளை பார்த்தபோது எங்களில் யாருக்கும் சிரிப்பே வரவில்லை.

இதையும் படிங்க: சிவாஜி கணேசனுக்கு டெஸ்ட் வைத்த உதவி இயக்குனர்… 100க்கு100 வாங்கி அப்ளாஸ் அள்ளிய நடிகர் திலகம்…

Sivakarthikeyan

Sivakarthikeyan

படம் பார்த்து முடிந்த பிறகு சிவகார்த்திகேயனை தொலைப்பேசியில் அழைத்தேன். சில நகைச்சுவை காட்சிகளில் சிரிப்பு வரவில்லை, கொஞ்சம் காட்சிகளை தூக்கிவிடுங்கள் என கூறினேன். ஆனால் அவர் இன்னும் சில காட்சிகளை படத்தில் இணைத்துவிட்டார்.

ஏன்? என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் ‘ரசிகர்களுக்கு நிச்சயமாக பிடிக்கும்’ என கூறினார். எனக்கு அதில் நம்பிக்கையே இல்லை. ஆனால் டான் திரைப்படம் வெளிவந்தபோது மிகப்பெரிய வெற்றியை பெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்திவிட்டது” என அப்பேட்டியில் கூறியிருந்தார்.

Next Story