துணிவு படத்தில் இருந்து ஒதுங்கிய போனி கபூர்… சைலன்ட்டாக நுழைந்து வேலையை காட்டிய உதயநிதி..

Thunivu
அஜித் நடிப்பில் உருவான “துணிவு” திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர். அதே போல் விஜய்யின் “வாரிசு” படமும் நாளை வெளிவரவுள்ளதால் இந்த பொங்கல் பண்டிகை கலைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thunivu
அஜித் நடித்த “துணிவு” திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இத்திரைப்படம் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடவுள்ளது. இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான பிஸ்மி, தனது வீடியோ ஒன்றில் ஒரு அதிர்ச்சிகரமான தகவலை பகிர்ந்துள்ளார்.
“துணிவு” படத்தை தயாரித்தது போனி கபூர் என்றாலும், ஒரு கட்டத்தில் மிக ரகசியமாக இத்திரைப்படம் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் கைக்குச் சென்றுவிட்டதாம்.
அதாவது “துணிவு” திரைப்படத்திற்கு ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம்தான் முதலில் ஃபைனான்ஸ் செய்ததாம். ஒரு கட்டத்தில் துணிவு படத்திற்கு சரியாக Funding நடக்கவில்லையாம். ஆதலால் “துணிவு” திரைப்படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது தடைபட்டதாம்.

Udhayanidhi Stalin
இந்த தருணத்தில்தான் ரெட் ஜெயன்ட் நிறுவனம் “துணிவு” திரைப்படத்தின் படப்பிடிப்பு சீராக நடப்பதற்குத் தேவையான பணத்தை கொடுத்தார்களாம். அதே போல் “துணிவு” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு Post Production-ல் மீண்டும் சில பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டதாம். ஆதலால் அஜித், டப்பிங்கிற்கே வராமல் இருந்தாராம். இந்த சிக்கலையும் ரெட் ஜெயன்ட் நிறுவனம்தான் தீர்த்துவைத்ததாம்.
இவ்வாறு ரெட் ஜெயன்ட் நிறுவனம் தனது அதிகபடியான பணத்தை “துணிவு” திரைப்படத்தில் முதலீடு செய்துள்ளதால், “துணிவு” திரைப்படமே ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் கைக்குச் சென்றுவிட்டதாம்.
இதையும் படிங்க: “அஜித்துக்கு சீன் சொன்னா பணம் கிடைக்குமா??”… விக்னேஷ் சிவன் செய்த தாறுமாறான சம்பவம்… வேற வெவல் பண்ணிட்டாரே!!

Boney Kapoor
ஆதலால் படத்திற்கு கிடைக்கும் லாபமும், நஷ்டமும் ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கே சென்று சேருமாம். இது போன்ற சம்பவங்களால் போனி கபூர் சிறிதளவு லாபத்துடன் “துணிவு” திரைப்படத்தில் இருந்து விலகிக்கொண்டதாக பிஸ்மி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.