Connect with us

என் லெவல் என்னனு எனக்கு தெரியும்.! டான் சிவகார்த்திகேயனை பார்த்து ஒதுங்கிய உதயநிதி.!

Cinema News

என் லெவல் என்னனு எனக்கு தெரியும்.! டான் சிவகார்த்திகேயனை பார்த்து ஒதுங்கிய உதயநிதி.!

உதயநிதி ஸ்டாலின் வெகு நாட்கள் கழித்து, தீவிர அரசியலில் இருந்து கொஞ்சம் கேப் விட்டு நடித்துள்ள நல்ல திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. இந்த படத்தை கனா படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் அருண்ராஜா காமராஜா இயக்கி இருந்தார். நேற்று இந்த படம் தமிழகமெங்கும் ரிலீஸ் ஆனது.

இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு உதயநிதி திரைப்படத்திற்கு கட்டவுட் ,கொண்டாட்டம் என சில திரையரங்குகளில் அவரது நலம் விரும்பிகள் கலக்கி விட்டனர்.

இருந்தாலும், உதயநிதி மிகவும் தன்மையாக நடந்துகொண்டாராம். இவரின் இந்த போக்கை பார்த்து திரையுலகினர் வியந்து போயுள்ளனர். இவரிடம் இந்த படத்திற்க்கு பெரிய ஹீரோ படம் போல 4மணி காட்சி போடலாமா என கேட்டுள்ளனர். ஆனால், நான் அவளோ பெரிய நடிகன் இல்லை அதனால், 4 மணி காட்சி வேண்டாம். வழக்கமான காட்சிகளில் படத்தை திரையிட்டால் போதும் என கூறிவிட்டாராம்.

இதையும் படியுங்களேன் – ரஜினியிடம் தனுஷுக்கு மட்டுமே அந்த உரிமை இருந்தது.! அதெல்லாம் எவளோ பெரிய விஷயம்..,

don

அதே போல, ஒரு புது படம் வருகிறது. அதுவும் பயங்கர செல்வாக்கோடு வருகிறது என்றால், அப்போது நன்றாக ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தாலும் அந்த படத்தை தூக்கிவிட்டோ அல்லது காட்சிகளோ குறைக்கப்படும்.

ஆனால், நெஞ்சுக்கு நீதி அப்படி செய்யவில்லையாம். ஆம், சிவகார்த்திகேயனின் டான் நல்ல வரவேற்பை பெற்று திரையிட்ட அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனால், அந்த படத்தை  ஒதுக்கி, நெஞ்சுக்கு நீதி திரையிட வேண்டாம். சிறிய திரையரங்குகள், டான் திரையிடாத திரையரங்குகளில் போட்டாலே போதும் என கூறிவிட்டாராம் உதயநிதி. இவரின் இந்த போக்கை பார்த்து திரையுலகினர் வியந்து போய்யுள்ளனராம்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top