உதயநிதி ஸ்டாலின், தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் சார்பாக பல திரைப்படங்களை சமீப காலங்களில் வெளியிட்டு வருகிறார். கடந்த 2008 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த “குருவி” திரைப்படத்தைத்தான் முதன்முதலில் தயாரித்தார் உதயநிதி. அதன் பின் “ஆதவன்”, “மன்மதன் அம்பு”, “7 ஆம் அறிவு” என தொடர்ந்து பல திரைப்படங்களை தயாரித்து வந்தார்.
மேலும் “விண்ணைத்தாண்டி வருவாயா”, “மதராசப்பட்டினம்”, “பாஸ் என்கிற பாஸ்கரன்”, “மைனா” போன்ற பல திரைப்படங்களை வெளியிட்டும் உள்ளார். இந்த நிலையில் சமீப காலமாக “டான்”, “விக்ரம்”, “வெந்து தணிந்தது காடு”, “கோப்ரா”, “கேப்டன்”, “லவ் டூடே” போன்ற பல திரைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இது ஒரு புறம் இருக்க மறுபுறம் உதயநிதி ஸ்டாலின் மேல் பல புகார்கள் எழுந்தன. அதாவது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளர்களை மிரட்டி படத்தை வெளியிடுகிறார் என்று வதந்தி பரவியது. இது குறித்து ஒரு பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்டபோது “நான் யாரிடமும் மிரட்டி வாங்கவில்லை. தயாரிப்பாளர்கள் அவர்களாகவே என்னை அணுகுகிறார்கள்” என கூறினார்.
மேலும் ‘லவ் டூடே” திரைப்படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தியிடமும் சமீபத்திய பேட்டி ஒன்றில் இது போன்ற கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அப்போது அவர் “தயாரிப்பாளர்களாகிய நாங்கள்தான் உதயநிதி ஸ்டாலினை அணுகுகிறோம். எங்களுக்கான பங்கு சரியாக வந்துவிடுகிறது” என கூறினார்.
இதனை தொடர்ந்து சமீப காலமாக உதயநிதி ஸ்டாலின் பல பேட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார். அது மட்டுமல்லாது அவர் வெளியிடும் திரைப்படங்கள் குறித்து மனம் விட்டும் பேசி வருகிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஒரு பிரபல யூட்யூப் சேன்னல் ஒன்றுக்கு பேட்டியளித்தார் உதயநிதி. அப்போது அவர் ஆர்யா நடிப்பில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்ட “கேப்டன்” திரைப்படம் குறித்து மிகவும் நகைச்சுவையான அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
இதையும் படிங்க: ராமராஜன் பட ஷூட்டிங்கில் நடந்த அத்துமீறல்… பகீர் கிளப்பும் பிரபல நடிகை…
“கேப்டன் திரைப்படத்தை ஆர்யா என்னிடம் தள்ளிவிட்டார். படம் Predator என்ற ஆங்கில படத்தை விட பயங்கரமாக இருக்கிறது என பில்டப் கொடுத்தார். கேப்டன் படத்தின் இயக்குனர் இதற்கு முன் பல நல்ல திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஆதலால் நான் கேப்டன் திரைப்படத்தை வெளியிட ஒப்புக்கொண்டேன். கேப்டன் படத்தை தவிர அவர் இயக்கிய மற்ற திரைப்படங்கள் எல்லாம் நல்ல படம்தான்.
கேப்டன் படத்தை சேலத்தில் பிரிவ்யூ ஷோ ஒன்றை ஏற்பாடு செய்து பார்த்தேன். என்ன படம் எடுத்துவச்சிருக்கார்ன்னு இருந்தது. ஆர்யா படம் பார்த்துவிட்டு ஃபோன் செய்யுங்கள் என என்னிடம் கூறினார். ஆனால் நான் அவருக்கு ஃபோன் செய்யவில்லை. அவரும் என்னை கூப்பிடவில்லை.
சில நாட்களுக்கு முன்பு ஆர்யாவை நான் ஒரு விருந்தில் சந்தித்தேன். அப்போது அவரை பார்த்து ‘கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா?, இதுக்கு Predator படத்தை அப்படியே எடுத்து வச்சிருக்கலாமே’ என கூறினேன். அந்த படத்தில் ஏலியன் பார்க்கவே அப்பாவியாக இருந்தது” என மிகவும் கலகலப்பாக தனது அனுபவத்தை அந்த பேட்டியில் உதயநிதி பகிர்ந்துகொண்டார்.
டிவி பேட்டி…
தமிழ் சினிமாவில்…
Kamalhaasan: 4…
SK 25:…
பிலிம் இன்ஸ்டிட்யூட்…