அந்த படத்தில் நான் நடிக்கவே இல்லை.. எல்லாமே டூப்புதான்!.. ஒப்பனா சொன்ன உதயநிதி..

by சிவா |
udhyanithi
X

கலைஞர் கருணாநிதியின் பேரன், தமிழக முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி என்பது எல்லோருக்கும் தெரியும். கல்லூரி படிப்பை முடித்தவுடனேயே சினிமா தயாரிக்கும் ஆசை வந்தது. எனவே, ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்கிற பெயரில் ஒரு பட நிறுவனத்தை துவங்கி விஜயை வைத்து குருவி படத்தை எடுத்தார். அதன்பின் ஏழாம் அறிவு உள்ளிட்ட சில படங்களை தயாரித்தார்.

udhyanithi

அவ்வப்போது அரசியல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வந்தார். ஒருகட்டத்தில் நடிகராகவும் மாறினார். ராஜேஷ் இயக்கிய ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் ஹீரோவாக மாறினார். முதல் படமே வெற்றி. அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். இடையிடையே அரசியல் பணியிலும் ஈடுபட்டு வந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். தற்போது அமைச்சராகவும் மாறிவிட்டார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள ‘மாமன்னன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதுதான் தன்னுடைய கடைசி திரைப்படம் என உதயநிதி தெரிவித்துள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்து 2020ம் வருடம் வெளிவந்த திரைப்படம் சைக்கோ. இந்த படத்தில் கண்பார்வை அற்றவராக உதயநிதி நடித்திருப்பார்.

psycho

இந்நிலையில், இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேசிய உதயநிதி ‘அந்த படத்தில் நிறைய காட்சிகளில் நான் நடிக்கவே இல்லை. என்னை போல இருந்த வேறு ஒருவர்தான் நடித்தார். ஏனெனில், அப்போது நான் தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக இருந்தேன். படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளில் அதிகம் நான் இருக்கமாட்டேன். என்னை போலவே ஒரு டூப் ரெடி பண்ணி மிஷ்கின் சாரிடம் கொடுத்துவிட்டேன். அவர்தான் நடித்தார்’ என உதயநிதி ஓப்பனாக பேசியுள்ளார்.

Next Story