நடிகர் விஜயை வைத்து படம் எடுக்க முன்னணி நடிகர்கள் பலரும் ஆசைப்படுகின்றனர். ஆனால், எல்லோருக்கும் அந்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை. நடிகர்களை உருவாக்குவதே இயக்குனர்கள் என்ற காலம் போய் முன்னணி ஹீரோக்களின் கால்ஷீட்டுக்காக இயக்குனர்கள் காத்திருக்கும் படி காலம் மாறிவிட்டது. அதேநேரம், மிஷ்கின், பாலா, வெற்றிமாறன் போல் ஹீரோக்களின் பின்னால் செல்லாத இயக்குனர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இதையும் படிங்க: யாரெல்லாம் அங்க பாத்தீங்க!… நெட்டிசன்களை ஏங்க வைத்த நடிகை வேதிகா…
Also Read
சரி விஷயத்துக்கு வருவோம்.. நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படம் துவங்கப்படும் முன்பே அவர் அருண் விஜயை வைத்து தடையற தாக்க, தடம் ஆகிய படங்களை இயக்கிய மகிழ்திருமேனி கூறிய கதையில் நடிக்க விருந்தார். ஆனால், உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு கதையை கூறி மகிழ் திருமேனி ஒகே செய்து வைத்திருந்தார்.

எனவே, தன் படத்தை முடித்து விட்டு விஜய் படத்திற்கு செல்லுங்கள் என உதயநிதி ஸ்டாலின் கூறிவிட்டதால் அவரால் தட்ட முடியவில்லை. அதன்பின், தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதி பிஸி ஆனார். தேர்தல் முடிந்து திமுக ஆட்சி அமைத்துவிட்டது. சில மாதங்கள் களப்பணி ஆற்றிய உதயநிதி பின்னர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

எனவே, இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னரே அவர் மகிழ் திருமேனி படத்தில் நடிக்கவுள்ளார். உதயநிதி படத்தை முடித்த பின்னரே விஜய் படத்திற்கு செல்ல முடியும் என்கிற நிலை அவருக்கு. விஜயும் மாஸ்டரை முடித்து விட்டு தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.
எனவே, விஜய் வாய்ப்பையும் விட்டுவிட்டு 2 வருடங்களுக்கும் மேல் படம் இயக்காமல் சும்மா இருக்கிறார் மகிழ் திருமேனி.
இப்படி செய்யலாமா உதயநிதி?….



