விஷாலை டார்க்கெட் பண்ணும் உதயநிதி!.. ரத்னம் படத்துக்கு போட்டியா அந்த படத்தை இறக்கும் ரெட் ஜெயண்ட்..

சினிமா உலகில் வியாபாரத்தை தாண்டி நட்போடு இருப்பது என்பது ரொம்ப நாள் நீடிக்காது. சிலர் மட்டுமே அதை சரியாக கடைபிடிப்பார்கள். உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளராக அறிமுகமாகி பல படங்களையும் தயாரித்திருக்கிறார். 2008ம் வருடம் விஜயை வைத்து குருவி படத்தை தயாரித்தார். இதுதான் அவருக்கு முதல் படம்.

அதன்பின் சூர்யாவை வைத்து ஆதவன், ஏழாம் அறிவு போன்ற படங்களை தயாரித்தார். அதன்பின் அவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை ஏற்படவே ஒரு கல் ஒரு கண்ணாடி, நண்பேன்டா, இது கதிர்வேலன் காதல், மனிதன், சரவணன் இருக்க பயமேன், கலக தலைவன், மாமன்னன் ஆகிய படங்களை அவர் தயாரித்து நடித்தார்.

இதையும் படிங்க: சினிமாவிற்கு முன்னரே சென்னைக்கு ஓடிவந்த ரஜினிகாந்த்… பட்டினி, பசியால் கிடந்த சோகம்!..

இப்போது லைக்காவுடன் இணைந்து இந்தியன் 2, மணிரத்னத்துடன் இணைந்து தக் லைப் ஆகிய படங்களை தயாரித்து வருகிறது ரெட் ஜெயண்ட் நிறுவனம். ஒருபக்கம், கடந்த 3 வருடங்களாக பல படங்களை வாங்கி வினியோகம் செய்து வருகிறது. குறிப்பாக அதிக பட்ஜெட்டுகளில் உருவாகும் படங்களை ரெஜ் ஜெயண்ட் நிறுவனம்தான் தமிழகம் முழுவதும் வினியோகம் செய்து வருகிறது.

எனவே, தியேட்டர்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், மற்ற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் போவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஒருபக்கம், உதயநிதிக்கு நெருக்கமான விஷால், ஆர்யா, சிவகார்த்திகேயன், சந்தானம் போன்றவர்கள் அவரை பயன்படுத்தி தங்களின் படங்களை சிக்கல் இல்லாமல் ரிலீஸ் செய்து வந்தார்கள்.

vishal

ஆனால், விஷாலுக்கும், உதயநிதிக்கும் இப்போது உரசல் ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் ஊடகத்தில் பேசிய விஷால் ‘எனது மார்க் ஆண்டனி படம் வெளியான போது ரிலீஸை தள்ளி போட சொன்னார்கள். அதற்கு அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?.. சினிமா என் கையில்தான் இருக்கிறது என சொன்னவர்கள் யாரும் உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது. அவர்கள் சொன்னதை நான் கேட்கவில்லை. அதனால்தான் அப்படம் வெற்றி அடைந்தது’ என சீறினார்.

இதையும் படிங்க: 18 முறை விஜயகாந்துடன் மோதிய பாக்கியராஜ் படங்கள்… ஜெயிச்சது யாரு? வாங்க பார்க்கலாம்!..

இந்நிலையில், ஹரி இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் ரத்னம் திரைப்படம் வருகிற 26ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு போட்டியாக வேண்டுமென்றே சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை 4 படத்தை இறக்க ரெட் ஜெயண்ட் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

அதோடு, அரண்மனை 4 படத்தை சுந்தர் சி பெயரிலேயே வெளியிடும் வேலையிலும் ரெட் ஜெயண்ட் இறங்கியிருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது. ஒரே தேதியில் இருபடங்கள் வெளியாவது பிரச்சனை இல்லை என்றாலும், அரண்மனை 4-க்கு அதிக தியேட்டர்கள் போய்விட்டால் ‘ரத்னம்’ படத்துக்கு குறைவான தியேட்டர்கள் கிடைக்கும் சிக்கல் ஏற்படும் என கணிக்கப்படுகிறது.

 

Related Articles

Next Story