Connect with us
mgr

Cinema History

போதாத காலம்! ஒன்னுமில்லாத நேரத்திலும் ஆசை விட்டபாடில்லை – எம்ஜிஆரை தக்க சமயத்தில் மீட்டெடுத்த பிரபலம்

Actor MGR: எம்ஜிஆரின் திரை வாழ்க்கையில் பெரும் வசூலை தந்தப் படம் உலகம் சுற்றும் வாலிபன். இந்தப் படத்தை எம்ஜிஆரே இயக்கி தயாரித்து நடித்தார். நாடோடி மன்னன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படமாக உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் அமைந்தது.

படத்தில் சந்திரலேகா, மஞ்சுளா, லதா என மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர். வெளி நாடுகளில் எடுக்கப்பட்ட முதல் படமாக இந்தப் படம் அமைந்தது. அதனால் படத்தில் இருந்த அத்தனை கலைஞர்களையும் மிகவும் பாதுகாப்பாக ஜப்பான் போன்ற நாடுகளுக்கு கொண்டு செல்லும் பொறுப்பை கவனமாக ஏற்றுக் கொண்டார் எம்ஜிஆர்.

இதையும் படிங்க: இளையராஜா நல்லா இல்லனு சொன்னால் படம் சூப்பர் டூப்பர் ஹிட்… இது என்னப்பா புது உருட்டா இருக்கு!

1970 ஆம் ஆண்டு துவங்கிய படமாக இருந்தாலும் இரண்டு ஆண்டுகளாகியும் படம் படம் ரிலீஸாகமலேயே இருந்தது. ஆனால் படப்பிடிப்பு எல்லாம் முடிந்த நிலையிலும் ஒரே ஒரு பாடலுக்காக எம்ஜிஆர் டார்ஜிலிங்கில் போய் எடுக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தாராம். ஏற்கனவே படத்தில் அதிகமான பாடல்கள் இருக்க இன்னும் ஒரு பாடலை எடுக்கவேண்டும் என நினைத்தாராம்.

அதனால் பனிச்சறுக்கு விளையாட்டிலும் பயிற்சி எடுத்துக் கொண்டாராம் எம்ஜிஆர். அதே நேரத்தில் எம்ஜிஆருக்கு ஆலோசகராகவும் அரசியல் வாழ்க்கையில் பெரும் துணையாக இருந்தவருமான வீரப்பன் இந்தப் படத்தை திண்டுக்கல் தொகுதியின் இடைத்தேர்தலுக்கு முன்பாக ரிலீஸ் செய்யவேண்டும் என நினைத்தாராம்.

இதையும் படிங்க: கண்ணாதாசனின் பாடலை வைத்தே அவரை கலாய்த்த தேவிகா!.. வெளிவராத தகவல்!…

ஏனெனில் தொகுதி தேர்தலுக்கு செலவு செய்ய காசு இல்லாததால் இந்த படம் ரிலீஸ் செய்தால்தான் காசு கிடைக்கும். அதை வைத்து செலவு செய்து கொள்ளலாம் என வீரப்பன் எண்ணியிருக்கிறார். ஆனால் எம்ஜிஆரோ இந்தப் படம் தோல்வி அடைந்தால் தேர்தல் நேரத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்ற பயத்தினால் எம்ஜிஆர் தேர்தலுக்கு பிறகே ரிலீஸ் செய்யலாம் என சொன்னாராம்.

ஆனால் வீரப்பன் எம்ஜிஆரிடம் எடுத்துக் கூறினாராம். ஏற்கனவே படத்திற்கு அதிக பணம் போட்டாச்சு என்றும் இன்னும் ஒரு பாடலை எடுக்க வேண்டும் என சொல்கிறீர்கள். தேர்தல் செலவுக்கும் நம்மிடம் காசு இல்லை. அதனால் எடுத்த வரைக்கும் போதும். படத்தை ரிலீஸ் செய்ய வழியை பாருங்கள் என்று சொன்னாராம். வீரப்பனின் அறிவுரையை கேட்டு எம்ஜிஆர் அவ்வாறே செய்தாராம்.

இதையும் படிங்க: பொம்மையா நிக்குற காருக்கு அது எதுக்கு? கமல் படத்தில் நடந்த வில்லங்கமான சம்பவம் – இருந்தே ஒன்னும் போச்சா?

படம் ரிலீஸ் ஆகி மாபெரும் சாதனையை பெற்றது. திண்டுக்கல் தேர்தலின் வெற்றிக்கும் வழிவகுத்துக் கொடுத்தது. தக்க சமயத்தில் ஆலோசனை கூறி பெரும் இக்கட்டான சூழ் நிலையில் இருந்து எம்ஜிஆரை வீரப்பன் காப்பாற்றினார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top