உலக நாயகன் கமல்ஹாசனை பற்றி சொல்லி தெரியவேண்டியது இல்லை. தமிழ் சினிமாவில் எந்த மாதிரி ஒரு கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதனை ஏற்று அற்புதமான நடிப்பை கொடுக்கும் நடிகர்களில் அவரும் ஒருவர். நடிப்பு மட்டுமில்லாமல், படம் இயக்குவது, பாடல்கள் எழுதுவது என அனைத்திலையும் சிறந்து விளங்குகிறார்.
ஒரு படத்தில் எந்தெந்த விஷயங்களை தேவைப்படுகிறதோ அதனை, அடுத்தடுத்த படங்களுக்கு புதியதாக ஏதேனும் கொண்டு வந்து தமிழ் சினிமாவை பிரமிக்க வைத்துவிடுவார். மேலும், கமல்ஹாசன் ஒரு படத்தில் நடித்தால் அந்த காட்சி சரியாக வரும் வரை நடித்துக்கொண்டே இருப்பார்.
அதைபோல், ஏதேனும் படங்களை இயக்கினால் கூட ஒரே டேக்கில் நடித்து முடித்தால் கமலுக்கு பிடிக்காதாம். ஆம், பொதுவாக சினிமாவில் ஒரே டேக்கில் நடித்து முடித்துவிடும் கலைஞர்களை சிங்கிள் டேக் ஆர்டிஸ் (single take artist )
என்று அழைப்பது உண்டு.இதையும் படியுங்களேன்- சத்தமில்லாமல் வேலை காட்டிய லோகேஷ்… தளபதி 67 ரகசியத்தை மொத்தமாக கண்டுபிடித்த ரசிகர்கள்…
இதனையடுத்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்டியில் சிங்கிள் டேக் ஆர்டிஸ் குறித்து கமல்ஹாசன் பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” ஒரே டேக்கில் நடித்து முடித்துவிட்டால் ஒரு பெரிய நடிகருக்கு உதாரணம் என்பது போல, அடுத்த டேக் கேட்டால் அவமானம் என்பது போல சொல்கிறார்கள். ஒரே டேக்கில் நடித்து முடித்தால் சிங்கிள் டேக் ஆர்டிஸ்-ஆ அது என்ன பட்டம் எனக்கு பிடிக்கவே இல்லை என்பது போல பேசியுள்ளார்.
ஏஆர்.ரகுமான், சாய்ரா…
பிக்பாஸ் வீட்டில்…
Nepotism: பாலிவுட்டில்…
மழை வருவதற்கு…
கடந்த தீபாவளிக்கு…