Connect with us

தல அஜீத் அல்டிமேட் ஸ்டாராக காரணமான இயக்குனர்கள் இவர்கள் தான்…!

Cinema History

தல அஜீத் அல்டிமேட் ஸ்டாராக காரணமான இயக்குனர்கள் இவர்கள் தான்…!

‘தல’ என்றும் காதல் மன்னன் என்றும் அல்டிமேட் ஸ்டார் என்றும் அடைமொழியில் கூறப்படும் அஜீத்குமார் தனது ஆரம்ப காலக்கட்டத்தில் எப்போதுமே புதுமுக இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு தருவார்.

அவர் யாரிடமும் கதையைக் கேட்க மாட்டார். இயக்குனர்களையே நம்பி படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வார். அது வெற்றியாக அமைந்தாலும், தோல்வியாக இருந்தாலும் நடுநிலையில் தான் எப்போதும் இருப்பார். அந்த வகையில் அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த சில இயக்குனர்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.

Aasai ajith, suvalakshmi

வசந்த்

1995ல் வெளியான ஆசை படத்தை இவர் தான் இயக்கினார். இந்தப்படத்தில் இருந்து தான் அஜீத்குமாரின் திரையுலக வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. நிறைய ரசிகர்கள் அஜீத்தின் நடிப்பை ரசிக்க ஆரம்பித்தனர்.

இந்தப்படத்தில் ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்தில் வெகு யதார்த்தமாக எந்தவித அலட்டலும் இல்லாமல் ஆர்ப்பாட்டம் இன்றி அமைதியாக நடித்து அசத்தியிருப்பார். இதுதான் அவருக்கு பலவகையான ரசிகர்களைப் பெற்றுத் தந்தது.

அதுவும் இளம் பெண்கள் மத்தியில் அஜீத் என்றாலே அவ்வளவு வரவேற்பு இருந்தது. நீ என்ன கமல் மாதிரி அழகா என்பது போய் அஜீத்மாதிரி மாப்பிள்ளை இருக்கானான்னு கேட்கற அளவுக்கு வந்து விட்டது.

அந்த வகையில் ஆசை படத்தை இயக்கிய இயக்குனர் வசந்த்துக்கே அந்தப்படத்தின் வெற்றி போய் சேரும். படத்தின் பாடல்கள் அனைத்தும் தேவாவின் இன்னிசையில் சூப்பர் ஆக இருந்தது.

அகத்தியன்

Kathal Kottai Director Agathiyan, ajith, devayani

1996ல் வான்மதி என்ற படத்தை எடுத்தார். இதில் கிருஷ்ணா என்ற கேரக்டரில் அஜீத் துள்ளலான நடிப்பைக் கொடுத்திருப்பார். சுவாதியை உருக உருக காதலிப்பார். தேவாவின் இன்னிசையில் பாடல்கள் சூப்பர்.

அதே ஆண்டில் தான் அதே இயக்குனர் அகத்தியனின் கைவண்ணத்தில் காதல் கோட்டை உருவானது. இந்தப்படம் அஜீத்குமாரின் திரையுலக வரலாற்றில் பெரிய மைல் கல்.

சரண்

1998ல் சரண் இயக்கத்தில் உருவான காதல் மன்னன் அஜீத்திற்கு என்று பெரிய அளவிலான ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கியது. இந்தப்படத்திற்கு பின்னர் அஜீத் படம் என்றால் படம் பட்டையைக் கிளப்பும் என்ற எண்ணம் தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் எழுந்தது.

 

இந்தப்படத்தில் அஜீத் சிவா என்ற கேரக்டரில் சூப்பராக நடித்து இருந்தார். 1999ல் வெளியான அமர்க்களம் என்ற அதிரடியான படத்தை அஜீத்துக்கு தந்ததும் இயக்குனர் சரண் தான்.

எஸ்.ஜே.சூர்யா

பிரபல நடிகராக தற்போது வலம் வரும் இவர் ஆரம்பத்தில் பிரபல இயக்குனராகவே இருந்தார். அஜீத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது இவர் தான். இவர் இயக்கிய வாலி திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது.

இந்தப்படத்தில் அஜீத் முற்றிலும் மாறுபட்ட இரு வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். தேவா, சிவா என்ற அந்த கேரக்டர்களைப் படம் பார்த்து விட்டு வெளியில் வந்து சில மணி நேரங்கள் அதன் தாக்கத்தை ரசிகர்கள் அனுபவிக்கலாம். அதிலும் வாய் பேச இயலாத அஜீத்தின் நடிப்பு வெறித்தனமாக இருக்கும்.

vaali ajith

இதன் பிறகு அஜீத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீனா, சரவண சுப்பையா இயக்கத்தில் சிட்டிசன், எழில் இயக்கத்தில் பூவெல்லாம் உன் வாசம், சிங்கம்புலி இயக்கத்தில் ரெட், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வில்லன்,(இந்தப்படத்திற்கு தான் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.) வரலாறு ஆகிய படங்கள் பேசப்பட்டன.

தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா, விஷ்ணுவர்த்தன் இயக்கிய பில்லா, ஆரம்பம் படங்கள் சூப்பர்ஹிட் ஆனது. அதன் பிறகு சிவா இயக்கத்தில் வீரம், கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top