தனுஷும் இல்ல.. சூர்யாவும் இல்ல!. என் புருஷன்தான் ஃபர்ஸ்ட் சிக்ஸ் பேக்!.. மீம்ஸ் போட்ட நடிகை!..

by சிவா |   ( Updated:2025-04-27 06:57:20  )
surya
X

நடிகர் சிவக்குமார் செய்யும் சில செயல்கள் சில சமயம் சர்ச்சைகளில் முடிந்துவிடும். ஏற்கனவே செல்போனை தள்ளிவிட்டது, சால்வையை பிடிங்கி கீழே வீசியது என அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி பின்னர் மன்னிப்பு கேட்டிருக்கிறார். சமீபத்தில் சிக்ஸ் பேக் பற்றி பேசி கொள்ளுத்தி போட்டார்.

ரெட்ரோ பட விழாவில் ‘சினிமாவில் என் மகன் சூர்யாதான் ஃபர்ஸ்ட் சிக்ஸ் பேக் வைச்சான். வேற எவன் வெச்சான்?’ என சூர்யாவின் அப்பா சிவக்குமார் பேசியது அப்போதே ட்ரோலில் சிக்கியது. சூர்யாவுக்கு முன்பே பலரும் சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார்கள். சிவக்குமாருக்கு தெரியாமல் இருக்கலாம் என சிலர் சொன்னார்கள்.

குறிப்பாக சூர்யாவை பிடிக்காத பலரும் கூகுளில் போய் தேடி எந்த நடிகர் முதலில் சிக்ஸ் பேக் வைத்தார் என தேட துவங்கிவிட்டனர். அப்போது பொல்லாதவன் படத்திற்காக தனுஷ்தான் முதலில் சிக்ஸ் பேக் வைத்தார். அதேபோல், சத்யம் படத்திற்காக விஷால் சிக்ஸ் பேக் வைத்தார். அதன்பின்னரே சூர்யா வைத்தார் என பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர்.

surya

அதேபோல், ஒரு வீடியோவில் பேசிய நடிகர் விஷாலும் அதை உறுதிப்படுத்தினார். இந்நிலையில்தான் நடிகை உமா ரியாஸ்கான் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு மீம்ஸை பகிர்ந்துள்ளார். தனது கணவர் ரியாஸ்கான் சிக்ஸ் பேக்கோடு இருக்கும் புகைப்படம் ஒன்றையும் அந்த மீம்ஸோடு அவர் இணைத்திருக்கிறார்.

வின்னர் படத்தில் ‘என் ஆள அடிச்சது எவன்?’ என வடிவேல் கேட்கும்போது ‘கேட்கல. கிட்ட வந்து சொல்லு’ என ரியாஸ்கான் கொடுக்கும் ரியாக்‌ஷனை போட்டு இந்த மீம்ஸை உருவாக்கியிருக்கிறார்கள். இதைப்பார்த்த சிலர் ‘சூர்யா தாக்கப்பட்டார்’ என பதிவிட்டு வருகிறார்கள்.

சிலரோ ‘ஹீரோல யார் சிக்ஸ் பேக் வச்சாருன்னுதான் சிவக்குமார் கேட்டார். உங்க கணவர் ஹீரோ இல்லையே’ எனவும் பதிவிட்டு வருகிறார்கள். அப்படிப் பார்த்தால் இப்போது காமெடி நடிகராக கலக்கி வரும் மொட்டை ராஜேந்திரன் எப்போதே சிக்ஸ் பேக் வைத்திருந்தார் எனவும் சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த சிக்ஸ் பேக் அக்கப்போரு எப்போது முடியுமோ தெரியவில்லை!…

Next Story