Connect with us

Cinema News

இவனுகள எங்களால கட்டுப்படுத்த முடியல.! தமிழ் தயாரிப்பாளர்கள் கதறல்.!

முன்பெல்லாம் தமிழ் பட தயாரிப்பாளர்கள் ஒரு படத்தை தயாரித்து விட்டு அந்த படத்தை எப்படி தியேட்டரில் சரியான தக்க சமயத்தில் ரிலீஸ் செய்து, எப்படி லாபம் பார்ப்பது என்று மிகவும் தவித்து வந்தனர்.

நல்ல படமாக இருந்தாலும் ரிலீஸ் நேரத்தில் அதைவிட நல்ல திரைப்படம் வெளியாகி இருந்தால் படம் தோல்வி அடைந்துவிடும். ஆதலால், தயாரிப்பாளர்கள் படம் ரிலீசாக்கி நல்ல வசூல் வரும்வரை வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு திரிவார்கள்.

ஆனால், தற்போது OTT நிறுவனங்களில் பட வெளியிடு அதிகமாகிவிட்டதால் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யமுடியாது அல்லது ரிலீஸ் தாமதமாகும். பெரிய ஹீரோ படங்கள் கூட சுலபமாக OTT நிறுவனங்கள் கைவசம் சென்று விடுகின்றன. இதனால், தயாரிப்பாளருக்கும் குறிப்பிட்ட வழியில் நல்ல லாபம் கிடைத்து வருகிறது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு சில இடைத்தரகர்கள் சுமாரான படங்களை கூட நல்ல படங்கள் என்று OTT நிறுவனங்களிடம் ஏமாற்றி விற்று OTT நிறுவனங்களிடம் இருந்தும் தயாரிப்பாளர்களிடமிருந்தும் கமிஷன் பெற்றுக்கொண்டு கொள்கின்றனராம்.

இதனால், போட்டி நிறுவனங்கள் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றனராம். அதனால், தற்போது நேரடியாக படங்களைப் பார்த்துவிட்டு அதன் பின்னர் அதனை வாங்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்யலாம் என்று தீர்மானத்தில் உள்ளனராம்.

இதையும் படியுங்களேன்- சாய் பல்லவி கன்ஃபார்ம்.! ஆனா எந்த படத்துக்குனு இன்னும் தெரியலயே.!

ஒரு பைசா கூட செலவு இல்லாமல் இடைத்தரகர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிப்பதை தயாரிப்பாளர்களும் விரும்பவில்லையாம். ஆதலால், விரைவில் இந்த இடைத்தரகர் கும்பலுக்கு ஓர் முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top