தமிழ் சினிமாவில் ஆச்சரியமான முடிவை கொண்ட திரைப்படங்களின் வரிசை...! கொஞ்சம் கூட எதிர்பார்க்காத க்ளைமாக்ஸ்...

சினிமா வரலாற்றில் ஒவ்வொரு திரைப்படத்தின் வெற்றி பெரும்பாலும் அந்த படத்தின் முடிவை பொருத்து அமைந்திருக்கும். யாரும் எதிர்பார்க்காத வகையில் மக்களை அதிர்ச்சியூட்டும் வகையில் சில படங்களின் க்ளைமாக்ஸ் காட்சிகள் அமைந்திருக்கின்றன. அந்த வகையில் அமைந்த நல்ல வரவேற்பை பெற்ற படங்களில் வித்தியாசமான க்ளைமாக்ஸ் காட்சிகளை பற்றி தான் இப்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
மௌனம் பேசியதே: காதலே பிடிக்காத ஒரு நாயகன் வாழ்க்கையில் காதலின் வலியை ஏற்படுத்தி அவள் இல்லாத வாழ்க்கை இல்லை என்று வரும்போது திடீரென அந்த காதலி தன் காதலனிடமே வந்து இவர் தான் நான் கல்யாணம் பண்ணிக்க போகும் நபர் என்று கூறுவாள். இதற்கிடையில் நிறைய விஷயங்கள் நடந்து அந்த காதலை கல்லூரியில் வேறு ஒரு பெண் காதலித்துக் கொண்டிருக்க கடைசியில் இவனை கரம் பிடிக்க கல்லூரி தோழி காத்திருப்பாள். இதில் நாயகனாக சூர்யா, நாயகியாக திரிஷா ஆகியோர் நடிக்க படம் வித்தியாசமான முடிவோடு அமைந்திருக்கும்.
ஷாஜகான்: படத்தின் நாயகன் ஒரு பெண்ணை காதலிக்க அவன் நண்பனும் அதே பெண்ணை காதலிக்க இது தெரியாத நம் நாயகன் தன் நண்பனுக்கு அந்த பெண் கிடைக்க நிறைய உதவிகளை செய்வான். அது வரைக்கும் அவர்கள் இருவரும் காதலிப்பது ஒரே பெண் என்றே தெரியாது நாயகனுக்கு. அதன் பின் தெரியவர நண்பனுக்காக தன் காதலையே விட்டுக் கொடுத்து விடுவான். இந்த படத்தில் நாயகனாக நடிகர் விஜய், நாயகியாக ரிச்சா பல்லட் ஆகியோர் நடித்திருப்பர்.
உன்னை நினைத்து: படிப்பிற்காக போராடும் ஒரு ஏழைப் பெண். அவளுக்கு பொருளாதார ரீதியில் உதவிசெய்ய அந்த பெண் இவனை காதலிக்க இருவரும் பரஸ்பரமாக காதலிக்க ஆரம்பித்து விடுவார்கள். இடையில் ஒரு பணக்கார பையன் இந்த பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்த இந்த நபரை தேடி அவள் சென்று விடுவாள். சிலகாலம் கழித்து பணக்கார பையனின் புத்தி தெரிந்து அவள் விலகி விட மீண்டும் நம் நாயகனை சரணடைவாள். மீண்டும் அவளுக்கு தேவையான உதவிகளை செய்து மருத்துவராக்கி விடுகிறான்.மீண்டும் கல்யாணம் என்ற பேச்சை எடுக்கும் அந்த பெண்ணிடம் நான் இவளை தான் திருமணம் செய்ய போகிறேன் என்று தன்னையே நினைத்துக் கொண்டிருக்கும் இன்னொரு பெண்ணை அடையாளப்படுத்துகிறான் நம் ஹீரோ. இதில் நடிகர் சூர்யா நாயகனாகவும் மருத்துவ மாணவியாக நடிகை லைலாவும் நாயகியாக நடிகை சினேகாவும் நடித்திருப்பர்.