Connect with us
llavafe

Cinema History

கர்வத்தால் பிரிந்ததா இந்த வெற்றி கூட்டணி?.. காலத்தாலும் பதில் சொல்லமுடியாத மர்மம்!…

இளையராஜா பியோ பிக் படப்பிடிப்பிற்கான வேலைகள் தீவிரம் காட்டி வரப்படும் நேரத்தில், வைரமுத்து குறித்த காட்சிகள் இடம் பெறுமா? என்கின்ற கேள்வி இப்பொழுதே எழத்துவங்கியுள்ளது. இந்த இருவரின் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் தமிழகத்தையே புரட்டி போட்ட காலமும் இருந்திருக்கத்தான் செய்தது.

தமிழ் சினிமா வரலாற்றில் இளையராஜா என்கின்ற பெயர் அழிக்க முடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது. பண்ணைபுரத்திலிருந்து கிளம்பிய இந்த இசைக்குவியல் இன்று உலகமெல்லாம் பரவியுள்ளது. இசைக்கு மயங்காத இதயம் உண்டோ? என்பது போல, இவரின் இசைக்கு அடிமையாகாத மனங்களும் உண்டா? என்று கேட்கும் அளவிற்கு இவரின் இசை பயணித்த தூரம் கணக்கிடமுடியாத ஒன்றாகும்.

இப்படிபட்ட நிலையில் இவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுப்பதற்கான வேலைகள் தயாராகி வருகிறது. இந்த நிலையில் படம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டும் வருகிறது. குறிப்பாக வைரமுத்துவுடன் நட்பு பாராட்டி வந்தும் இருந்திருக்கிறார் இளையராஜா. இந்த கூட்டணி உருவாக முக்கிய காரணமாக பார்க்கப்பட்டவர் பாரதிராஜாவே.

ilva

ilva

பாரதிராஜவால் தான் தமிழ் சினிமாவிற்கு வந்தவர் இளையராஜா, ஆனால் வைரமுத்துவின் வரிகளுமே பாடல்கள் வெற்றி பெற்ற காரணங்களில் ஒன்றாகவும் சொல்லப்படுகிறது. ஆக இவர்கள் இருவரின் கூட்டணி கிடைக்குமா? என அந்த காலத்தில் நேரம் கேட்டு இவர்களின் வீட்டு வாசலில் நின்றவர்கள் ஏராளம். அப்படி இசைக்கப்பட்ட பாடல்களை மீண்டும், மீண்டும் கேட்ட வைத்தது இவர்களது திறமை.

இந்த கூட்டணி என்ன காரணத்தினால் பிரிந்தது என பல்வேறு சந்தேகங்களும், சர்ச்சைகளும் தொடர்ந்து இருந்து வருகிறது. தன்மானம் மிக முக்கியம்.. அதற்கு இடைஞ்சல் வந்தால் பாட்டெழுதும் தொழிலையே விடுவேன் என வைரமுத்து கூறியதாக பிரபல விமர்சகர் டாக்டர். காந்தராஜ் கூறியிருந்தார்.மேலும் இளையராஜாவின் அந்த குணமே அவருக்கு எதிர்மறை விமர்சனகளை பல இடங்களில் வாங்கி தந்ததாகவும் அது படைப்பாளிகளுக்கே உரிய கர்வம் தான்.

இதுவே கூட இளையராஜா, வைரமுத்துவிற்குமான இடைவெளிக்கு காரணமாக இருக்கலாம் . இதுபோலவே ஒரு முறை பெரிய தகராறு ஏ.வி.எம்.நிறுவனத்திற்கும், இளையராஜாவிற்கும் ஏற்பட சந்திரபோஸ் என்ற புதுமுகத்தை அறிமுகப்படுத்தியது ஏ.வி.எம் எனவும் காந்தராஜ் குறிப்பிட்டார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top