Connect with us

Cinema History

உலகநாயகன் என்று சும்மாவா சொன்னார்கள்? ஹாலிவுட்டில் கமல் படத்தின் யுக்தி…!

தமிழ்சினிமாவில் இருந்து பல படங்கள் மலையாளம், தெலுங்கு, இந்தி என டப் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது நமக்கு தெரிந்த விஷயம். ஆனால் ஹாலிவுட்டுக்கும் போய் இருக்கிறது என்றால் அது ஆச்சரியம் தான். அது யாருடைய படமாக இருக்கும் என்றால் அது நம்ம உலகநாயகன் படம் தான். ஹாலிவுட் படத்திற்கே சவால் விடுகிறது கமலின் படம் என்று சொல்வார்கள். அது உண்மை தான் போலும். தொடர்ந்து படியுங்கள். விஷயம் வெளிச்சத்திற்கு வரும்.

இங்கு ரசிக்காதவர்கள் அங்கு ரசிக்கிறார்கள். இங்கு கமலின் படம் தோல்வி. ஆனால் உலகளவில் அது ரசனை பெறுகிறது. அப்படிப்பட்ட படங்களில் பலவற்றை நாம் உதாரணமாகச் சொல்லலாம். அவற்றில் ஒன்று ஹேராம். இங்கு பரவலாகப் பேசப்பட்டும் கமலின் நடிப்பு பாராட்டப்பட்டும், சில காட்சிகள் சர்ச்சைக்குரியதாகவும் இருந்தது. ஆனால், இந்தப்படத்தைப் பலரும் விமர்சனம் செய்தனர்.

இப்படி ஒரு தரமான படத்தைக் கமலைத் தவிர வேறு யாராலும் தர முடியாது என்றனர். சிலர் இந்தப்படம் புரியவே இல்லை என்று மாற்றுக்கருத்தைத் தெரிவித்தனர். ஆனால் ஹங்கேரி நாட்டு பல்கலைக்கழகம் ஒன்றில் இந்தப்படம் பாடமாக உள்ளது.

Kamal in Heyram

உண்மை என்னவென்றால், கமல், மணிரத்னம் போன்ற திரையுலக ஜாம்பவான் படைப்பாளிகளின் படங்களை ஒருமுறைக்கு இருமுறை பார்த்தால் தான் புரியும். அதற்காகவே ரூம் போட்டு யோசிப்பார்கள் போல எனக்கூட எண்ணத் தோன்றும்.

உண்மை நிலவரம் இதுதான். தமிழ்த்திரையுலகம் மீது அவர்களுக்குத் தணியாத காதல் உள்ளது. ஏதேனும் வித்தியாசமான விருந்தை தம்மை வாழ வைத்துக் கொண்டு இருக்கும் ரசிகர்களுக்கு விருந்தாகப் படைக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது. அதனால் தான் தற்போது கூட விக்ரம் படத்தில் கமல்ஹாசன் முழு ஈடுபாட்டுடன் நடித்து வருகிறார்.

அவர் நடிக்கும் படங்களில் பலவற்றில் ஒரு விமர்சனம் எழுவதுண்டு. இவர் படத்தில் நடித்தால் டைரக்டர்களுக்கு இவர் சொல்வதைத் தான் கேட்கவேண்டும் என்று வற்புறுத்துவார். காட்சிகளைத் தன் விருப்பப்படி மாற்றி அமைக்கக் கட்டாயப்படுத்துவார் என்றும் சொல்வதுண்டு. இது தவறான விஷயமாக நாம் கருதக்கூடாது.

ஒரு கலைஞனுக்குத் தான் ஒரே காட்சியைப் பலவிதமானக் கோணங்களில் கையாளத் தெரியும். ரசிகர்ளின் விருப்பம் எது? தயாரிப்பாளர்களின் விருப்பம் எது? இயக்குனர்களின் விருப்பம் எது? கதாநாயகனின் விருப்பம் எது? என்று தனித்தனியாக பிரித்துப்பார்க்கும் யுக்தியும் தெரியும்.

அந்த வகையில் கமல்ஹாசனின் சொந்தத் தயாரிப்புகளில் வெளியான பல படங்கள் தரமானவையாகவே வந்துள்ளன. அவற்றை விரல்விட்டு எண்ணிவிடலாம். தற்போது வெளியாக உள்ள விக்ரம் படமும் கமலின் சொந்தப்படம் தான். இந்தப்படத்திலும் டைரக்ஷனில் கமலின் தலையீடு உண்டா என்று கேட்டால் உண்டு என்றே சொல்லலாம்.

படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இளம் இயக்குனர் தளபதி விஜயின் மாஸ்டர் என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்தவர். இவர் கமலிடம் கதை சொன்னபோது சில திருத்தங்களை மட்டும் கமல் செய்யும்படிக் கேட்டுக்கொண்டாராம்.

அதற்கு இயக்குனரும் சம்மதித்து திருத்தங்கள் செய்தாராம். அதன்பின் அது கமலின் படமாக மாறிவிட்டதாம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகவுள்ள கமலின் படத்திற்கு மவுசு கூடியுள்ளது. விற்பனை சக்கை போடு போட்டு வருகிறது. ஜூன் 3 ல் எங்களுக்குத் தீபாவளி என்கின்றனர் அவரது ரசிகர்கள். அது சரி. விஷயத்திற்கு வருவோம்.

kamal in Aalavanthan

பிரபல ஹாலிவுட் இயக்குனர் குவன்டின் டாரன்டினோவின் இயக்கத்தில் 2003ல் வெளியான படம் கில் பில் வால்யும் 1. இந்தப்படத்தில் ஒரு கொடூரமானக் காட்சி இடம்பெற்றுள்ளது. இதைக் கார்டூனாக எடுத்து இருப்பார்கள்.

பாலிவுட் இயக்குனர் மற்றும் இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் வில்லன் அனுராக் காஷ்யப் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் குவான்டின் டாரன்டினோ இது போன்ற கார்டூன் வடிவிலான கொடூரமானக் காட்சியை எடுக்கும் யுக்தியை 2001ல் வெளிவந்த ஆளவந்தான்  தமிழ்படத்தில் இருந்து தான் எனது கில் பில் வால்யும் 1 படத்திற்காக சுட்டேன் என்று கூறியுள்ளார்.

அது நம்ம உலகநாயகன் கமல் நடிப்பில் 2001ல் வெளிவந்த ஆளவந்தான் படத்தில் வரும் கார்டூன் காட்சி தான். அதில் ஒரு கொடூரமான கொலையை கமல் அரங்கேற்றம் செய்திருப்பார். அதை நிஜத்தில் எடுத்தால் கர்ண கொடூரமாக இருக்கும் என்பதால் கார்டூன் வடிவில் எடுக்கப்பட்டுள்ளதாக அப்போது கமல் தெரிவித்தார்.

அந்த சமயத்தில் இந்த கார்டூன் காட்சி கொஞ்சம் நீளமாக உள்ளது என்று ரசிகர்களில் பலர் அதிருப்தி தெரிவித்தனர். இதனால் தானோ என்னவோ படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. ஆனால் கமலின் அற்புதமான நடிப்பை யாரும் பாராட்டத் தவறவில்லை.

Maruthanayagam kamal

அந்த வகையில் இங்கு ரசிக்கப்படாத ஒரு விஷயம் உலகளவில் ரசிக்கப்படுகிறது என்றால் அது கமலின் படங்களாகத்தான் இருக்கும். கமலின் கனவு படமான மருதநாயகத்தையும் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்தப்படத் தொடக்கவிழாவிற்கு இங்கிலாந்து ராணி அல்லவா வந்து சிறப்பித்தார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top