Connect with us

உயிரைப் பணயம் வைத்து ஒரே டேக்கில் மாடியிலிருந்து டைவ் அடித்து குதித்த அகில உலக சூப்பர்ஸ்டார் இவர் தான்..!

Cinema History

உயிரைப் பணயம் வைத்து ஒரே டேக்கில் மாடியிலிருந்து டைவ் அடித்து குதித்த அகில உலக சூப்பர்ஸ்டார் இவர் தான்..!

ஜாக்கிஷான் பிறந்தபோதே மிகவும் ஆரோக்கியமான குழந்தையாக இருந்தார். 7.4.1954ல் பிறந்தார். அவரது பெற்றோர் கம்யூனிஸ்ட் புரட்சியால் மெயின்லாண்ட் சீனாவிலிருந்து ஹாங்காங் ஓடி வந்த அகதிகளாக கஷ்டப்பட்டனர். ஜாக்கிஷானின் இயற்பெயர் சான் காங்-சாங். ஆனால் அவரது பெற்றோர் அவரை பௌ பௌ என்று தான் அழைத்தனர்.

ஜாக்கிஷானின் அப்பா பிரெஞ்ச் தூதரகத்தில் அம்பாசிடருடைய வீட்டில் சமையல்காரராக வேலை செய்தார். அந்த வீட்டைப் பார்த்துக் கொள்ளக்கூடிய பணியாளராக அவரது அம்மா வேலை செய்தார். ஜாக்கிஷானின் அப்பா குங்பூ கற்றுக்கொண்டவர். சின்ன வயசிலிருந்தே தனது மகனுக்கும் குங்பூ கத்துக்கொடுக்க ஆரம்பித்தார். இதுதான் அவனுக்கான ஒழுக்கத்தையும் வாழ்க்கை நடைமுறையையும் கத்துக்கொடுக்கும்னு நம்பினார். ஜாக்கிஷான் எழுந்து நடக்க ஆரம்பிச்சபோதே அவருக்கு குங்பூ பயிற்சி கொடுக்கப்பட்டது.

jackishan kungboo

அப்பாவின் நம்பிக்கைக்கு நேர்மாறாக சிறுவயதிலேயே தனது கலையை தவறாகப் பயன்படுத்தி விட்டார் ஜாக்கிஷான். தனக்கு குங்பூ தெரியும் என்பதால் மற்ற பிள்ளைகளைத் தாக்கி அதில் சுகம் கண்டார். பள்ளியில் சேர்த்தால் சரியாகிவிடுவான் என்று நினைத்த தந்தைக்கு அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது. அங்கும் சக மாணவர்களை வம்புக்கு இழுத்தார் ஜாக்கிஷான்.

ஆஸ்திரேலியாவில் ஒரு வேலை வாய்ப்பு ஜாக்கிஷானின் அப்பாவிற்குக் கிடைத்தது. ஆனால் அங்கே போனால் ஜாக்கிஷானை அழைத்துச் செல்ல முடியாது. மாஸ்டர் யூ நடத்திக்கொண்டு இருந்த சைனா டிராமா அகாடமியில் கொண்டு போய் விட்டார். இங்குள்ள ஒரே படிப்பு மாஸ்டர் ஆர்ட்ஸ்தான். இங்கு தான் 10 வருஷமாக தனது வாழ்க்கையைக் கழித்தார். அரவணைக்க அப்பா அம்மா இல்லாத சூழல தனியாக போராடி ஜெயிக்கணும்ங்கற பாடத்தை இங்கே தான் கத்துக்கிட்டார்.

மாஸ்டர் யூ தான் எனக்கு இரண்டாவது தந்தை என புகழ்ந்தார் ஜாக்கிஷான். அவர் ஆக்ஷன் ஹீரோவாக உருவான இடமும் இதுதான். அந்தக்காலத்துல புரூஸ்லியோட படம் நிறைய ஹிட் ஆனது. தற்காப்புக்கலை சம்பந்தமான படங்களுக்கு கடும் கிராக்கியாக இருந்தது. அதனால் அதற்கான மவுசு அதிகரிக்க அது போன்ற படங்களாகவே ஹாங்காங்கில் அதிகளவு உருவானது. இதற்காக ஸ்ட்ண்ட் மேன்களின் தேவையும் அதிகரித்தது. சினிமாவில் சண்டைக்காட்சிகளில் துணை நடிகராக நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

jackishan

அப்படி தான் என்டர் தி டிராகன் படத்தில் புரூஸ்லியோட சண்டைக்காட்சிகளில் ஒரு துணை நடிகராக ஜாக்கிஷான் நடித்திருப்பார். அந்த சண்டைக்காட்சியில் ஸ்டைல் மன்னன் புரூஸ்லி தான் ப்ளான் பண்ணினதை விட அதிகமான வேகத்தில் ஜாக்கிஷானை தாக்கி விட்டார் புரூஸ்லி. அப்போது அவர் ஜாக்கிஷான்கிட்ட நேரடியாக வந்து மன்னிப்பு கேட்டு நீ வலியை அதிகமா தாங்குற. அதனால கண்டிப்பா பெரிய ஆளா வருவ என சொன்னாராம்.

அப்போ மிகவும் மகிழ்ந்தார் ஜாக்கிஷான். சக கலைஞர்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை புரூஸ்லியிடம் இருந்து கற்றுக்கொண்டார் ஜாக்கிஷான். 1972ல் ஹப்கிடோ, 1975ல் ஹேண்ட் ஆப் டெத் போன்ற படங்களில் ஸ்டண்ட் துணை நடிகராக நடித்தார். அவருக்கு அது போராட்டமான காலகட்டம். வருமானமும் குறைவு. அப்படிப்பட்ட சூழலிலும் தான் பட்ட கஷ்டத்தை எப்படியும் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றவில்லை.

இந்த வருமானத்தை வைத்து மது, மாது, சூது என ஜாலியாக வாழ்ந்தார். தனது வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது ஒரு பெண் தான். தான் வழக்கமாக செல்லும் பாரில் உள்ள ஒரு பெண் மறுநாள் வேறோருவருடன் சேர்ந்து உள்ளபோது அங்கு வரும் ஜாக்கிஷானுக்கு கைகாட்டிவிட்டுச் செல்கிறாள். அவர் யாரென்றே தெரியாமல் குழம்பித் தவிக்கிறார் ஜாக்கிஷான்.

jackishan and shamo hung

அன்று இரவு பாருக்குச் செல்லும்போது அந்தப் பெண் காலையில் கைகாட்டினேனே கவனிக்கவே இல்லை என சொன்னதும்…இந்த பெண் தான் அவரா என்பது கூட தெரியாமல் தான் நாம் போதையில் தவிக்கிறோமோ…இந்த வாழ்க்கை நமக்குத் தேவையா? இதற்காகவா நாம் குடிக்க வேண்டும்? அப்போது தான் ஜாக்கிஷானுக்கு இந்த போதையிலிருந்து விடுபட்டு இனி வாழ்க்கையில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. தனது நண்பராக இருந்த சாமோஹங் ஸ்டண்ட் மேனாக இருந்து இயக்குனராக மாறிவிட்டார். அவருடைய சிபாரிசில் இவருக்கு இன்னும் படவாய்ப்புகள் கிடைத்தது.

அப்போது முதல் ஜாக்கிஷானுக்கு பெரிய திருப்புமுனையான ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஒரு மாடியிலிருந்து டைவ் அடித்து குதித்து தரையில் நிற்க வேண்டும். ஆனால் டூப் போடக்கூடாது. ஒரே டேக்கில் எடுக்கப்படும் காட்சி. கீழேயும் எதுவும் விரிக்கப்படாது. இதற்கு ஜாக்கிஷான் ஒப்புக்கொண்டு உயிரைப் பணயம் வைத்து வெற்றிகரமாக செய்து காட்டினார். அதிலும் முதலில் அவர் குதித்ததும் அனைவருமே கைதட்டி பாராட்டினர். அப்போது அவர் செய்தது தான் ஆச்சரியம்…எனக்கு இப்போது குதித்தது திருப்தி இல்லை. நான் மறுபடியும் குதிக்கிறேன் என்று சொல்லி மீண்டும் அதே போல் குதித்து வெற்றிகரமாக காட்சியை முடித்தார்.

அதிலிருந்து ஹாங்காங்கில் ஜாக்கிஷானின் புகழ் பரவத் தொடங்கியது. 1973ல் லிட்டில் டைகர் ஆப் கேன்டன் என்ற படத்தில் நடித்தார். இதுதான் அவர் ஹீரோவாக நடித்த முதல் படம். மிகவும் குறைந்த பட்ஜெட் என்பதால் தயாரிப்பாளரால் இவருக்கு சம்பளம் கூட தர முடியவில்லை. இந்தப்படம் தோல்வியடைந்தது. 1974ல் சூப்பர்மேன் அகெய்ன்ஸ்ட் தி ஓரியண்ட் என்ற படத்தில் ஸ்டன்ட் கோ ஆர்டினேட்டராக பணியாற்றினார். சினிமாவில் அவருக்குத் தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சியது. அவரது பெற்றோரைக் காண ஆஸ்திரேலியா சென்றார்.

jackishan

சினிமாவில் ஸ்டண்ட் மேனாக நடிக்க வந்த போது அவரது பெயர் யான் லோ. ஆஸ்திரேலியாவில் ஆங்கிலம் பயில அவர் ஒரு பள்ளிக்கு வருகையில் அவருக்கு ஸ்டீவன் என்று பெயர். அவரது பெற்றோர் வேலை பார்த்த எம்பசியில் அவருக்கு வைத்த பெயர் பால். ஹாங்காங்கில் சினிமா வாய்ப்பு கிடைக்காத கால கட்டத்தில் ஆஸ்திரேலியா சென்று கொத்த வேலைக்குச் சேர்ந்தார். அங்கு தான் இவருக்கு ஜாக்கி ஷான் என்ற பெயர் வந்தது. அவரது அப்பா இன்னும் 2 வருஷம் தான் உனக்கு டைம்.

இதுக்குள்ள நீ ஹாங்காங் போய் சாதிக்கலைன்னா திரும்ப இங்க வந்து கொத்த வேலை பாருன்னு சொன்னாரு. திரும்பவும் ஹாங்காங் சென்றார். அங்கு லோ என்ற ஸ்ட்ண்ட் டைரக்டர் தான் இவரை பெரிய ஆளா மாற்றணும்னு நினைச்சாரு. 1976ல் நிய| பிஸ்ட் ஆப் பரி என்ற படம் வந்தது. அதுவும் தோல்வி தான். அப்போது ங் சி யூன் என்ற டைரக்டர் ஜாக்கிஷானுக்கு தனது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top