ஐந்து மடங்கு வசூல்… ரஜினிகாந்தின் இன்ஸ்பிரேஷன்… அருந்ததி படத்தில் மிஸ் பண்ணக்கூடாதது இவ்வளோ இருக்கா?

by Akhilan |   ( Updated:2025-04-06 02:53:29  )
ஐந்து மடங்கு வசூல்… ரஜினிகாந்தின் இன்ஸ்பிரேஷன்… அருந்ததி படத்தில் மிஸ் பண்ணக்கூடாதது இவ்வளோ இருக்கா?
X

arundati

Arundhati: பல ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவில் ஹீரோக்களின் ஆதிக்கத்தை உடைக்கும் விதமாக அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த அருந்ததி திரைப்படம் குறித்து நீங்கள் அறிந்திருக்க வேண்டிய சில விஷயங்கள்.

2009ம் ஆண்டு வெளியான கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில், அனுஷ்கா நடித்த "அருந்ததி" திரைப்படம், இன்று கூட தமிழ் சினிமாவில் பலரின் நினைவில் என்றும் நிலைத்திருக்கிறது.

2004ம் ஆண்டு வெளியான அஞ்சி படத்தின் கதையை வைத்துதான் அருந்ததி உருவாக்கப்பட்டது. மேலும் படத்தின் கதையை ஷ்யாம் பிரசாத் ரெட்டி "சந்திரமுகி" படத்தினை முன்மாதிரியாக வைத்தும் உருவாக்கி இருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு கதாநாயகியை மையப்படுத்தி உருவானது.

படத்திற்கு 5'10" உயரத்தில் ஹீரோயின் தேவைப்பட அதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில் "ஜெமினி" கிரண், அனுஷ்காவை இந்தப் படத்திற்கு பரிந்துரை செய்தார். இவ்வாறே, "அருந்ததி" படத்திற்குள் அனுஷ்கா வந்துவிட்டார்.

இந்த படத்தின் மற்றொரு பலம் "பொம்மாயி" என அழைக்கும் வில்லன் பசுபதி.. முதலில் அந்த வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தையில் இருந்தவர் நம்மூர் நடிகர் பசுபதி தானாம். ஆனால் அவருக்கு கால்ஷூட் கிடைக்காமல் போக அந்த கேரக்டருக்கு சோனு சூட் வந்தார்.

மேலும், 1976 ஆம் ஆண்டு வெளியான "ஓமன்" படத்தை தழுவி இப்படத்தில் ஷயாஜி ஷிண்டே நடித்த "பாரதி" கதாபாத்திரம் இணைக்கப்பட்டது. தெலுங்கு சினிமாவில் உருவான இப்படம் பின்னர் தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வெளியானது.

கோட்டியின் இசையில், "ஜக்கம்மா" உள்ளிட்ட எல்லா பாடல்களுமே செம ஹிட்டடித்தது. "அருந்ததி" திரைப்படம் 10 நந்தி விருதுகளை வென்றது. 13 கோடிகளில் உருவான இப்படம் 75 கோடி வரை வசூலை குவித்தது. 2009 இல் வெளியான இந்த படம் இன்னும் பெரும் பாராட்டை பெற்று வருகிறது.

Next Story