இதுவரை ரஜினியை பற்றி தெரியாத ஒரு விஷயம்!.. கண்கலங்கிய நடிகர்....

by Rohini |   ( Updated:2023-04-19 07:28:17  )
rajini
X

rajini

தமிழ் சினிமாவில் அனைவரும் கொண்டாடும் நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். கோடான கோடி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு ஒரு மிகப்பெரிய ஆளுமையாக திகழ்ந்து வருகிறார். ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் ரஜினி ஊரில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவரின் வீட்டின் முன்பு கேக் வெட்டி மகிழும் ரசிகர்களை ஒவ்வொரு ஆண்டும் பார்க்க முடிகிறது.

அந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் ரஜினி அதிக செல்வாக்கு கொண்டவராக இருக்கிறார். எப்போது மேடையில் பேசினாலும் ரஜினி அவரின் ரசிகர்களுக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இப்பேற்பட்ட ஒரு நடிகரை தமிழ் நாட்டிற்கே தலைவனாக்கி பார்க்க வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்பட்டனர். ரஜினிக்கும் அரசியலில் ஆசை இருந்தது. வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் கடைசியாக ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்தார் ரஜினி.

இல்லையென்றால் கண்டிப்பாக ரசிகர்கள் அவரை மிகப்பெரிய இடத்தில் உட்கார வைத்து ரசித்திருப்பார்கள். மேலும் ரஜினியை பற்றி சினிமா துறையில் இருக்கும் குற்றச்சாட்டு என்னவெனில் கோடிகளை அள்ளும் ரஜினி சினிமாக் காரர்களுக்காக என்ன செய்தார் என்றும் யாருக்கேனும் உதவி செய்தாரா என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் கொங்கு தமிழுக்கு சொந்தக்காரரும் நகைச்சுவை நடிகருமான அனுமோகன் சமீபத்தில் ரஜினியை பற்றி கூறிய செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் மரியாதையை ஏற்படுத்தியிருக்கிறது. படையப்பா படத்தில் ரஜினியிடம் ‘ஏனுங்க இந்த பாம்பு பொத்தில் கைவிட்டீங்களே கடிச்சிராத்துங்களா’ என்று அடிக்கடி கேட்டு அந்த வசனத்தின் மூலம் மிகவும் பிரபலமானார் அனுமோகன்.

அவரின் மகளுக்கு திருமணம் பேசியிருந்தாராம். அந்த நேரத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியிருந்த அனுமோகன் யாரிடமாவது கடன் கேட்கலாமா? என்று நினைத்தாராம். உடனே அவர் நினைவுக்கு வந்தது ரஜினிதானாம். ரஜினியிடம் நாம்
ஏன் கடன் கேட்க வேண்டும்? உதவியாகவே கேட்கலாம் என்று நினைத்து பத்திரிக்கையும் கூடவே ஒரு கடிதத்தையும் வைத்து ரஜினியிடம் கொடுத்து விட்டு வந்தாராம்.

இதையும் படிங்க : நடிகையின் வயதை பாடலில் சொன்ன கண்ணதாசன்!.. கவிஞருக்கு குசும்பு அதிகம்தான்!…

அதன்பிறகு ரஜினி அவரது மேனேஜரிடம் அனுமோகன் என்ன எதிர்பார்த்தாரோ அதைவிட பத்து மடங்கு தொகையை அவரிடம் கொடுத்து அனுமோகனிடம் கொடுக்க சொன்னாராம். இந்த செயலால் அனுமோகன் மிகவும் மெய்சிலிர்த்து போனாராம். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் கூட பொன்னம்பலம், போண்டாமணி, பிதாமகன் தயாரிப்பாளர் போன்ற பலருக்கு ரஜினி உதவிகளை செய்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story