நான், ரஜினி, அமீர்கான், நாகார்ஜுனா!.. கூலி படத்துல தியேட்டரே தெறிக்கப் போகுது!.. உபேந்திரா உறுதி!

by Saranya M |
நான், ரஜினி, அமீர்கான், நாகார்ஜுனா!.. கூலி படத்துல தியேட்டரே தெறிக்கப் போகுது!.. உபேந்திரா உறுதி!
X

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படமான கூலி படத்தின் ஒரு சூப்பரான அப்டேட்டை நடிகர் உபேந்திரா பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது கூறியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படம் இந்த ஆண்டு வெளியாக உள்ளது. இந்த படத்தில் நாகார்ஜூனா, உபேந்திரா சத்யராஜ், ஸ்ருதிஹாசன், அமீர் கான், பூஜா ஹெக்டே, சௌபின் சாகிர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் நடிப்பில் தொடர்ந்து வெளியாகும் படங்களில் அனிருத் இசையமைத்து பாடல்களை ஹிட் கொடுத்து வருகிறார். இந்நிலையில் கூலி படத்திலும் அனிருத் இசையமைத்துள்ளார்.

மேலும், ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார் உள்ளிட்டோர் கேமியோ ரோலில் நடித்தது போல கூலி படத்திலும் அமீர் கான், நாகார்ஜூனா, உபேந்திரா ஆகியோர் நடித்து வருகின்றனர். வெவ்வேறு மொழிகளில் இருந்து நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருப்பதால் இது ஒரு பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.

இந்நிலையில் தனது புதிய படமான ’45’ படத்துக்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் உபேந்திரா இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்னை வந்து சந்தித்து கதை சொல்ல தொடங்கிய போது கதை எல்லாம் சொல்ல வேண்டாம் ரஜினிகாந்த் சார் பக்கத்தில் நின்றால் கூட போதும் என்றேன். அவருடன் நடிப்பதற்கு நான் ரொம்ப ப்ளெஸ்ட்டா நினைக்கிறேன் எனக் கூறியுள்ளார். மேலும், கூலி படத்தில் நான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாகார்ஜூனா, அமீர் கான் காம்பினேஷன் சீன் தியேட்டரை தெறிக்கவிடும் என சூப்பரான அப்டேட் கொடுத்துள்ளார்.

நான்கு மொழிகளிலும் உள்ள முன்னணி நட்சத்திரங்களும் ஒரே ஃப்ரேமில் வரும் போது ப்ளாஸ்டாக இருக்கப்போகிறது. அந்த காட்சியை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர் என்றார். இந்த 45 படத்தில் உபேந்திராவுடன் சிவராஜ்குமாரும் இணைந்து நடித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இருவரும் கலந்துக் கொண்டு கூலி மற்றும் ஜெயிலர் 2 அப்டேட்களை அள்ளிக் கொடுத்துள்ளனர்.

Next Story