போட்ட காசை எடுப்பாரா லோகேஷ் கனகராஜ்?.. உறியடி விஜய் குமார் நடிப்பு எப்படி? ஃபைட் கிளப் விமர்சனம்!

ஃபைட் கிளப் படத்தை பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்துள்ளார் லோகேஷ் கனகராஜ். ஜி ஸ்குவாட் எனும் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த நிலையில், இந்த படத்தை தனது பேனரில் ரிலீஸ் செய்துள்ளார். அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் விஜய்குமார், மோனிஷா மோகன் மேனன், கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் இன்று வெளியானது.

ஹாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்ற படத்தின் டைட்டிலை வைத்துக் கொண்டு இளைஞர்கள் பட்டாளத்தை வைத்து இந்த படத்தை இயக்கி உள்ளனர்.

இதையும் படிங்க: பட பூஜை முடிந்த உடனே பரம சந்தோஷம் போல!.. தனியாக கணவருக்கு ட்ரீட் கொடுத்த நயன்தாரா.. நச் க்ளிக்ஸ்!..

பழவேற்காடு பேக்ட்ராப்பில் கடலும், காத்தும் என அசத்தலான பின்னணியில் உருவாகி உள்ள இந்த படத்தில் குத்துச்சண்டை வீரராக இருக்கும் பெஞ்சமின் ஹீரோ செல்வா உள்ளிட்ட இளைஞர்களை கால்பந்தாட்ட விளையாட்டில் கவனம் செலுத்த வைத்து அவர்களை விளையாட்டுத் துறையில் சாதிக்க முயற்சித்து வருகிறார்.

அதே ஊரில் வில்லனாக வலம் வரும் கிருபா இளைஞர்களை போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கி வருகிறார். அவருடன் பெஞ்சமின் உடைய தம்பி ஜோசப் கிருபாவுடன் சேர்ந்து விடுகிறார். பெஞ்சமினை கொலை செய்து விட்டு அரசியலில் பெரிய ஆளாக மாறும் கிருபா ஜோசப்பை ஏமாற்றி விடுகிறார்.

இதையும் படிங்க: புது படத்துக்கு தலைப்பை ஆட்டைய போட்ட விக்னேஷ் சிவன்!.. அதுக்குள்ள பஞ்சாயத்தா?!..

செல்வாவை வைத்து கிருபாவை போட்டுத் தள்ள ஜோசப் போடும் ஸ்கெட்ச் என்ன ஆனது, இந்த பழிவாங்கும் படலத்தில் இருந்து ஹீரோ விஜய்குமார் தப்பித்தாரா? என்ன செய்தார்? என்பது தான் இந்த படத்தின் கதை.

லோகேஷ் கனகராஜ் படங்களில் வருவது போல போதைப் பொருள், ரண கொடுரமான லைவ்வான சண்டைக் காட்சிகள் என அதகளம் செய்வதாலே இந்த ஃபைட் கிளப்பை அவர் வாங்கி வெளியிட்டு இருக்கிறார். படமும் முதல் பாதி விறுவிறுப்பாகவும் இரண்டாம் பாதி கொஞ்சம் ஸ்பீடு பிரேக்கருடன் நல்ல கிளைமேக்ஸ் உடன் முடிந்திருக்கிறது.

இந்த வாரம் விஜய் குமாரின் ஃபைட் கிளப்பை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினால் லோகேஷ் பெரிதாக கல்லா கட்டுவார்.

ஃபைட் கிளப் - ஓயாத சண்டை!

ரேட்டிங் - 3/5.

 

Related Articles

Next Story