Categories: Cinema History Cinema News latest news

நீச்சல் உடையில் ஊர்வசி… தயவு செஞ்சு அப்படி பண்ணிடாதீங்க!… தயாரிப்பாளரிடம் கெஞ்சிய சம்பவம்…

1980களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஊர்வசி. இவர் பல திரைப்படங்களில் குடும்ப பாங்கான கதாப்பாத்திரங்களிலேயே நடித்திருந்தார். எனினும் சில திரைப்படங்களில் கவர்ச்சி வேடங்களிலும் நடித்துள்ளார். அவ்வாறு ஒரு திரைப்படத்தில் நீச்சல் உடையில் நடித்திருக்கிறார் ஊர்வசி. அப்போது அவர் தயாரிப்பாளரிடம் கெஞ்சிய சம்பவம் ஒன்றை குறித்து இப்போது பார்க்கலாம்.

Urvashi

1984 ஆம் ஆண்டு மோகன், ராதா, ஊர்வசி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “அம்பிகை நேரில் வந்தாள்”. இத்திரைப்படத்தை மணிவண்ணன் இயக்கியிருந்தார். சித்ரா லட்சுமணன் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். இதில் ஊர்வசி ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

Also Read

Ambigai Neril Vanthaal

இந்த நிலையில் இத்திரைப்படத்தில் கதாநாயகி நீச்சல் உடை அணிந்து நீச்சல் குளத்தில் நீச்சல் அடிக்கும் காட்சி ஒன்றை படமாக்கினார்கள். அப்போது ஊர்வசி நீச்சல் உடை அணிய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆதலால் மிகவும் துணிச்சலாக நீச்சல் உடையில் நடித்தார் ஊர்வசி.

Chitra Lakshmanan

எனினும் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணனிடம், “தயவு செய்து என்னுடைய நீச்சல் உடை புகைப்படத்தை போட்டு விளம்பரம் செய்துவிடாதீர்கள்” என கேட்டுக்கொண்டாராம். எனினும் அக்காலகட்டத்தில் நீச்சல் உடையில் நடிப்பதற்கு அந்தளவிற்கு எந்த நடிகைக்கும் துணிவு இல்லை என்று இத்தகவலை பகிர்ந்த சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Urvashi

நடிகை ஊர்வசி, பாக்யராஜ் இயக்கிய “முந்தானை முடிச்சு” திரைப்படத்தின் மூலம்தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின் தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகையாக வளர்ந்த இவர், தற்போது சிறந்த குணச்சித்திர நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சதுன்னு சொன்னதே இந்த கமல் பட நடிகர்தான்… இவருக்கு இப்படி ஒரு பெருமை இருக்கா?

Published by
Arun Prasad