தமிழ்த்திரையுலகிற்கு வந்த உத்தமன்கள் - ஒரு பார்வை

by sankaran v |   ( Updated:2022-11-14 02:19:54  )
தமிழ்த்திரையுலகிற்கு வந்த உத்தமன்கள் - ஒரு பார்வை
X

Uthamaputhiran2

நிஜ வாழ்க்கை தான் பெரும்பாலும் கற்பனையும் காதலும் கலந்து திரையில் காட்டப்படுகிறது. இது ரசிகர்களின் ரசனைக்கு விருந்தாகிறது. நிஜவாழ்க்கையில் நடக்கமுடியாத சம்பவங்கள் படங்களில் நடக்கும் போது ரசிகன் விசிலடித்து மகிழ்கிறான்.

அவனுக்கு இது சிறந்த பொழுதுபோக்காக அமைகிறது. சில படங்கள் பொழுதுபோக்காக மட்டுமின்றி உன்னதமான கருத்தையும் வலியுறுத்துகிறது. அந்த வகையில் இப்போது திரைக்கு வந்த சில உத்தமன்களைப் பற்றிப் பார்ப்போம்.

உத்தமன்

Uthaman

சிவாஜிகணேசன் நடித்த இந்த படம் 1976ல் வெளியானது. நாயகனும், நாயகியும் காதலர்கள். காஷ்மீரில் ஐஸ் தண்ணீரில் நாயகி விழுந்து விடுகிறாள். நாயகன் ஓடோடிச் சென்று அவளைக் காப்பாற்றுகிறான்.

அதுமட்டுமல்லாமல் அவளுடன் உறவும் கொண்டு பிள்ளையைப் பெறுகிறான். ஆனால் நாயகியின் அப்பாவுக்கு காதலில் உடன்பாடு இல்லை.

கல்யாணம் செய்து வைக்கவும் விருப்பமில்லை. பிறந்த குழந்தையைக் கொன்றுவிட்டு, தன் மகளுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்.

தன் குழந்தையைத் தன்னிடம் தந்து விடும்படி நாயகன் அவரிடம் கேட்க குழந்தையைத் தருகிறேன். ஆனால், இனி தன் மகளின் வாழ்க்கையில் குறுக்கிடக்கூடாது என்கிறார்.

நாயகனும் அதற்கு சம்மதிக்கிறான். 5 வருடம் கழித்து நாயகனை சந்திக்கும் நாயகி, அவனுடன் இருக்கும் சிறுவனைப் பற்றிக் கேட்க, அது தன் குழந்தை என்கிறான்.

கடைசியில் தன் பேரன் ஆடி ஓடுவதைக் காணும் நாயகியின் அப்பா மனம் மாறி தவறை உணர்கிறார். நாயகனும், நாயகியும் ஒன்று சேர அவர்கள் பெற்ற குழந்தையே காரணமாகிறது.

ஹாட்ரிக் அடித்த உத்தமபுத்திரன்

முதன் முதலாக 1940ல் இந்தப்படம் டி.ஆர்.சுந்தரம் இயக்கத்தில் பி.யு.சின்னப்பா, என்.எஸ்.கிருஷ்ணன், காளி என்.ரத்னம், டி.எஸ்.பாலையா, ராஜம்மா, டி.ஏ.மதுரம் உள்பட பலர் நடித்துள்ளனர்.

Uthamaputhiran

அதன்பிறகு 1958ல் வெளியான இந்தப்படத்தை டி.பிரகாஷ் ராவ் இயக்கினார். சிவாஜி, தங்கவேலு, எம்.கே.ராதா, பத்மினி, கண்ணாம்பா உள்பட பலர் நடித்துள்ளனர். யாரடி நீ மோகினி என்ற அனல் பறக்கும் பாடல் இந்தப் படத்தில் தான் உள்ளது.

கடைசியாக 2010ல் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ், ஜெனிலியா நடிப்பில் இதே பெயரில் வெளியானது. விஜய் ஆண்டனி இசை அமைக்க பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது.
தனுஷ_ம், ஜெனிலியாவும் காதலர்கள். காதலுக்கு குடும்பம் உதவி செய்கிறது. ஆனால் சிலர்; காதல் கைகூடக்கூடாது என உபத்திரவம் செய்கின்றனர். அவர்கள் யார்? அவர்களது திட்டத்தை தனுஷ் எப்படி முறியடிக்கிறார் என்பது தான் கதை.

உத்தம புருஷன்

1989ல் கே.சுபாஷ் இயக்கத்தில் வெளியான படம் உத்தமபுருஷன். பிரபு, அமலா, சார்லி, தினேஷ், நிழல்கள் ரவி, வி.கே.ராமசாமி, ராதிகா உள்பட பலர் நடித்துள்ளனர்.

சங்கர் கணேஷ் இசையில் பாடல்கள் சூப்பர். நகைச்சுவை கலந்த குடும்பப்பாங்கான படம் இது. ரசிகர்கள் மற்றும் தாய்மார்கள் மத்தியில் ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற்ற படம்.

உத்தம வில்லன்

Uthama villian

2005ல் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் வெளியான படம் உத்தம வில்லன். ஜிப்ரானின் இசை, கிரேசி மோகன் வசனம் என படத்தில் கலகலப்புக்குப் பஞ்சமில்லை. ஆனால் படம் தான் புஸ்ஸாகி விட்டது.

படத்தில் பாடலுக்கு பஞ்சமில்லை. தடுக்கி விழுந்தால் பாடல் என்று பழைய படங்களில் தான் உண்டு. நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தப்படத்திலும் கிட்டத்தட்ட 14 பாடல்கள் உள்ளன.

Next Story