விஜய் அதுக்கு சம்மதிச்சா கூட்டணி வைப்போம்!.. வலையை விரிக்கும் உதயநிதி...
சினிமாவையும் தாண்டி அரசியலில் தான் விஜயை பற்றி பேச்சு எழுப்பப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக அவர் நடத்திய கல்வி விருது வழங்கும் விழா அனைவர் மத்தியிலும் ஒரு பீதியை கிளப்பியுள்ளது. அதை பற்றி அனைத்து அரசியல் தரப்பு தலைவர்களிடமும் கேள்வி முன்வைக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 11 மணி நேரமாக ஒரே மேடையில் நின்று கொண்டு தானே அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பரிசுத்தொகையை கொடுத்தது அரசியலுக்கான துவக்க புள்ளியாகவே பார்க்கப்பட்டது. இதைப் பற்றி பல அரசியல் பிரமுகர்களிடமும் கேட்கும் போது யாரு வேண்டுமென்றாலும் அரசியலுக்கு வரலாம் என்ற கருத்தைத்தான் பொதுவாக சொன்னார்கள்.
சில பேர் விமர்சித்தும் பேசினார்கள். சில பேர் விஜய் காணாமலேயே போய்விடுவார் என்று கூறினார்கள். இந்த நிலையில் உதய நிதியிடம் கேட்ட போதும் கூட நல்லது தான பண்றாரு, வரட்டுமே என்றும் கூறினார்.
இந்த நிலையில் இன்று அவருடன் நடத்திய பேட்டியில் விஜயை பற்றி சில சுவாரஸ்ய தகவல்களை கூறினார். அதாவது முன்பு ஒரு பேட்டியில் எனக்கும் விஜய்க்கு இடையில் சில பேர் சிண்டு முடிச்சு விட்டிருந்தனர் என்றும் அதை நானே சரி செய்து விட்டேன் என்றும் உதய நிதி கூறினார். இப்பவும் அந்த விரிசல் இருக்கிறதா என்று கேட்க,
அதற்கு உதய நிதி ‘அவர் பிறந்த நாளின் போது கூட அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தேன், பதிலுக்கு விஜயும் நன்றி என தெரிவித்தார்’ என்று கூறினார். மேலும் உதய நிதியின் குடும்ப விழாவிலும் கலந்து கொண்டு ஒரு பத்து நிமிடம் தனியாக பேசினார்களாம்.
ஆனால் அது அரசியல் பற்றி எதுவும் பேசவில்லையாம். அவர் அமைச்சர் ஆனதை பற்றி தான் விஜய் மிகவும் பிரமிப்பாக பேசிக் கொண்டிருந்தாராம். மேலும் விஜய் அரசியல் வருவதை குறித்து தனக்கு எந்த ஒரு எண்ணமும் இல்லை என்றும் அவருக்கு என்று சில கொள்கைகள் இருக்கும், எங்கள் இயக்கத்திற்கு என்று சில கொள்கைகள் இருக்கிறது.
இதையும் படிங்க : மணிரத்தினத்தை கால்கடுக்க காக்க வைத்த இளையராஜா!.. அங்கதான் எல்லாம் ஸ்டார்ட் ஆச்சி!..
இரண்டு கொள்கைகளும் ஒத்துப் போகிற மாதிரி சூழ்நிலை அமைந்தால் கூட்டணியை பற்றி ஆலோசிப்போம் என்று உதயநிதி கூறினார். அவர் கொள்கையை முதலில் சொல்லட்டும், அதன் பிறகு பார்க்கலாம் என்றும் கூறினார்.