சகநடிகரை கேவலமாக நடத்திய உதயநிதி...! உண்மையை உணர்ந்து மன்னிப்பு கேட்ட சம்பவம்..

by Rohini |
nithi_main_cine
X

தமிழ் சினிமாவின் அந்தஸ்தான நடிகரான உதய நிதி ஸ்டாலின். இவர் தான் இப்போது டாப். எந்த படம் தமிழில் வெளியானாலும் அதன் உரிமையை முதலில் வாங்குவது இவரின் நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் நெஞ்சுக்கு நீதி.

nihi1_cine

படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் நாட்டின் முதலமைச்சரும் இந்த படத்தை பார்த்து படக்குழுவை மனதார பாராட்டினார். மேலும் படத்தில் உதய நிதிக்கு ஜோடியாக தன்யா நடித்திருந்தார். மேலும் மயில்சாமி, சுரேஷ் சக்கரவர்த்தி, ரமேஷ் திலக் உட்பட பலரும் நடித்திருந்தனர்.

nithi2_cine
நடிகர் ரமேஷ் திலக் இந்த படத்தில் உதயநிதிக்கு குடிகார நண்பராக நடித்திருப்பார். அவருக்கு மனைவியாக கர்ப்பிணி பெண் கதாபாத்திரத்தில் ஒருவர் நடித்திருப்பார். அவர் வேறு யாருமில்லை. நடிகர் ரமேஷ் திலக்கின் உண்மையான மனைவியாம்.

nithi3_cine

இது தெரியாமல் உதயநிதி அவர்கள் இருவரையும் தப்பான கோணத்தில் நினைத்தாராம். ஏனெனில் ஷார்ட் முடிந்ததும் ரமேஷ் திலக் அந்த பெண்ணிடம் போய் அடிக்கடி பேசுவதை பார்த்த உதயநிதி அவர்கள் இருவருக்கும் ஏதோ ஒன்று இருக்கும் போல என தப்பாக நினைத்தாராம். அதன் பிறகு தெரிந்ததாம். உண்மையான கணவன் மனைவி என்று. தெரிந்ததும் தான் நினைத்ததை எண்ணி அவரிடம் போய் மன்னிப்பு கேட்டாராம் உதயநிதி.

Next Story