கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாத அப்பா-மகன் கதாபாத்திரம்...! ’மாமன்னன்’ படத்தில் உதயநிதிக்கு அப்பாவாக இவரா...?
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரும் அரசியல் பிரமுகருமான நடிகர் உதயநிதி ஸ்டாலின். சமீபத்தில் அருண்காமராஜ் இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி என்ற படத்தில் நடித்து மக்கள் மத்தியில் மேலும் நல்ல வரவேற்பை பெற்றார் உதயநிதி.
அரசியலுக்கு வந்தபிறகு வெளியான முதல் படம் இது தான். அதனால் தான் எதிர்பார்ப்புக்கு அளவே இல்லாமல் இருந்தது. முதலமைச்சரில் இருந்து அரசியலை சார்ந்த அனைத்து பிரபலங்களும் இந்த படத்தை பாராட்டினார்கள். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மாரிசெல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.
உதய நிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் இந்த படம் அரசியலை மையமாக இருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. பகத் பாசில் இந்த படத்தில் எதிர்க்கட்சி தலைவராக நடிக்கிறாராம். படத்தின் தலைப்புக்கு ஏற்ப உதயநிதி மாமன்னனாக இருப்பார் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில் உண்மையில் மாமன்னன் என்ற தலைப்பு வடிவேலுவுக்கு தான் பொருந்துமாம் இந்த படத்தில்.
உதய நிதிக்கு அப்பாவாக நடிக்கிறாராம் வடிவேலு. இந்த படத்தில் வெயிட்டான கதாபாத்திரத்தில் காமெடி கலந்து நடிக்கிறாராம். படம் பாதி அரசியல் பேசும் என ஒரு சாரார் தெரிவித்து வருகின்றனர்.