
Cinema News
படத்துல அந்த சீனு இல்லையாம்… வருத்தப்படும் உதயநிதி… மனைவி இருந்தும் மேடையில் கேட்டு அடம்….!
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் போனிகபூர் ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் படம் நெஞ்சுக்கு நீதி. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். நடிகை தான்யா ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடந்தது. இந்த படத்தில் உதய நிதி போலீஸாக நடிக்கிறார்.
விழாவில் போனிகபூர், சிவகார்த்திகேயன். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, படத்தின் நாயகி மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மேடையில் உதயநிதி பேசும் போது பல சுவாரஸ்யமாக தகவல்களை பகிர்ந்தார். அவர் கூறுகையில் ”இந்த படம் பாலிவுட்டில் வெளியான ஆர்டிகிள் 15 என்கிற சூப்பர் ஹிட் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் ஆகும். திடீரென போனிகபூர் என்னை பார்க்க வேண்டும் என கூறி அழைத்தார். இவர் எப்பவுமே தல-அ வைச்சு தானே படம் எடுப்பார், நம்மல ஏன் கூப்பிடுகிறார் என போய் அவரை சந்தித்தேன்.”
இந்த படத்தின் கதையை கூறி நீங்கள் தான் நடிக்க வேண்டும் என சொன்னார், சரி யாரை வைச்சு இயக்கலாம் என யோசித்த போது கனா படத்தின் ஒரு சீன் பார்த்து பிரமித்து விட்டேன், இந்த படத்தின் இயக்குனரையே இயக்க சொல்லலாம் என முடிவு செய்தோம். அதன் மூலம் உருவானது தான் நெஞ்சுக்கு நீதி படம்.
மேலும் அவர் கூறுகையில்” என்ன படத்துல ஒரு டூயட் வைச்சுருக்கலாம், முழுவதும் காட்டுக்குள்ளயே சுத்துவோம், ஒரு டூயட் பாடல் வைத்திருந்தால் நல்லா இருந்துருக்கும், அதுவும் “ எம்புட்டு இருக்குது ஆசை” பாடலை குறிப்பிட்டு இந்த மாதிரியான பாடல் காட்சி கூட படத்துல இல்லாம போச்சுனு கவலையாக கூறினார். அந்த பாடல் இவர் நடித்த பாடல் காட்சிதான். அதில் நடிகை ரெஜினாவுடன் ரொம்ப க்ளோசப்பா நடித்திருப்பார். விழாவில் உதயநிதியின் மனைவி இருக்கையின் முன்னாடி உட்கார்ந்திருந்தார். அவர் முன்னாடியே இந்த மாதிரி பாடல் காட்சி வேண்டும் என கூறியதும் அனைவரும் சிரித்தனர்.