அடேய் எப்பா.. போதும்டா சாமி! ஷங்கர் சொன்ன ஐடியாவால் காண்டான உதயநிதி – ‘இந்தியன்2’ வில் ரணகளம்

Published on: July 22, 2023
indian
---Advertisement---

லைக்கா ரெட் ஜெயன்ட் கூட்டு தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் தயாராகிக் கொண்டு வரும் திரைப்படம் இந்தியன் 2. ஏற்கனவே முதல் பாகம் வெளியாகி நல்ல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இந்த இரண்டாம் பாகமும் அதைவிட பெரிய அளவில் பேசப்பட வேண்டும் என அனைவருமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

indain1
indain1

அது மட்டும் இல்லாமல் சமீப காலமாக அரசியல் குறித்து பேசி வரும் கமல் இந்தப் படத்தில் எந்த மாதிரி அரசியலை பேசப் போகிறார் என்றும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த இந்தியன் 2 படத்தில் கமல் , காஜல் அகர்வால் முதன்மை கதாபாத்திரங்களாக நடிக்க கூடவே பிரியா பவானி சங்கர், சித்தார்த் போன்றோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

போல அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரத்தினவேலு ஒளிப்பதிவு செய்கிறார். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக தயாரிப்பு பணியில் இருக்கும் இந்த இந்தியன் 2 திரைப்படம் சமீப காலமாக தான் சூடு பிடித்திருக்கின்றது. எத்தனையோ பிரச்சனைகளை சந்தித்து தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றது.

indian2
indian2

இந்தப் படம் தொடங்கிய நேரத்தில் ஆரம்பத்தில் 220 கோடி பட்ஜெட்டில் இருக்க ரெட் ஜெயன்ட் உள்ளே வந்ததும் 170 கோடியாக குறைக்கப்பட்டு மீண்டும் அதனுடைய பட்ஜெட் 200 கோடியை நெருங்கி இருக்கின்றதாம். இந்த நிலையில் படத்தை போட்டுப் பார்த்த படக் குழு ஆச்சரியத்தில் மூழ்கி இருக்கின்றார்களாம்.

இதையும் படிங்க : ரஜினி படத்தில் வரும் சூப்பர் வசனம் சுட்டதா?!.. அதுவும் அந்த நடிகர்கிட்ட இருந்தா?!.. சீக்ரெட் சொன்ன ராதாரவி…

காரணம் படம் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ஓடுகின்றதாம். அதனால் இந்த இந்தியன் 2 படத்தை இரண்டு பாகங்களாக எடுத்து விடலாமா என யோசிக்கிறார்களாம். அது மட்டும் இல்லாமல் இன்னும் கொஞ்சம் படப்பிடிப்பில் வேலைகள் இருக்கின்றதாம். ஆனால் அதையும் கண்டிப்பாக எடுத்து விட வேண்டும் என சங்கர் உறுதியாக இருக்கிறாராம்.

இதை உதயநிதி இடம் சொல்ல அவரோ படம் எடுத்த வரைக்கும் இருக்கட்டும். இதுக்கு மேல் வேண்டாம் என்பதைப் போல சொல்லி இருக்கிறாராம். ஆனால் சங்கர் அவர்களை ஒரு வழியாக சம்மதிக்க வைத்திருக்கிறாராம். இன்னும் சில தரப்பு என்ன சொல்கிறது என்றால் இன்னொரு பாகம் வெளியாகும் போது அது தயாரிப்பாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஜாக்பாட் என்று தான் சொல்கிறார்கள்.

indian3
indian3

ஏனெனில் இந்தப் படத்தை netflix 220 கோடிக்கு வாங்கி இருக்கிறதாம். இது கிட்டத்தட்ட இந்தப் படத்தின் முழு பட்ஜெட் .இதுபோக சேட்டிலைட் உரிமம், தமிழ்நாடு தியேட்டர்கள் உரிமம், விநியோகஸ்தர்கள் உரிமம் என இன்னும் பல வியாபாரங்கள் இருக்கின்றன. அதை எல்லாம் கணக்கு போட்டு பார்த்தால் இன்னும் பல கோடிகளுக்கு இந்தப் படம் வியாபாரம் செய்யும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அதனால் இந்தியன் 2 படம் இன்னும் இரண்டு பாகங்களாக வெளிவர வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

இதையும் படிங்க : ‘லியோ’ படத்தில் சஞ்சய் தத்துக்கு இவரா டப்பிங் கொடுக்கிறார்? ஏற்கெனவே ஹிட் ஆன வாய்ஸ்பா..