அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்கவே மாட்டேன்...! ‘டான்’ படத்தை ஒதுக்கி தள்ளிய பிரபல நடிகர்...
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான திரைப்படம் ‘டான்’. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். மேலும் எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமுத்திரக்கனி, விஜய் டிவி பிரபலங்கள் உட்பட பல நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தனர். படம் வெளியாகி இன்னும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் இயக்குனர் சிபி சக்கரவர்த்திக்கு இதுதான் முதல் படம்.இவர் இயக்குனர் அட்லீயிடம் அசிஸ்டென்டாக பணி புரிந்தவர்.
படம் பார்த்த அனைவரும் சிபி சக்கரவர்த்தியை கொண்டாடினார்கள். அண்மையில் படத்தின் வெற்றியை படக் குழுவினர் கொண்டாடினர். அந்த விழாவில் இயக்குனர், சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, உதயநிதி போன்றோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய உதயநிதி உண்மையில் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தின் கதையை முதலில் என்னிடம் வந்து தான் கூறினார். நான் நடிக்க வேண்டும் என்று சொன்னார். ஆனால் அந்த படத்தில் பள்ளி பருவ காட்சிகளில் நடிக்க வேண்டும் என்பதால் அந்த கதாபாத்திரம் எனக்கு ஒத்து வராது என்று கூறி நான் நடிக்க வில்லை என்று சொல்லிவிட்டேன். ஆனால் அப்பொழுதே அவரிடம் ‘ படம் அமோக வெற்றி பெரும் ‘ என்று கூறினேன் என்று உதயநிதி தெரிவித்தார்.