தயவு செஞ்சு பண்ணுங்க....ஆண்டவரிடம் கோரிக்கை வைத்த உதயநிதி.... நடக்குமா...?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் வருகிற ஜூன் 3ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் படம் விக்ரம். கமல் நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் “பத்தல பத்தல” பாடல் வெளியாகி யூ-ட்யூப்பில் டிரென்டாகி வருகிறது.
இந்த படத்தில் பழைய விக்ரம் படத்தில் நடித்த அதே கதாபாத்திரத்தில் தான் போலீஸாக நடிக்கிறார் கமல். நீண்ட நாள்களுக்கு பிறகு கமல் நடித்துள்ள படம் வெளியாக இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடிக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதையும் படிங்கள் : அந்த கண்ணு என்னமோ பண்ணுது!…ரசிகர்களை அதிர வைத்த ரித்திகா….
விழாவிற்கு திரையுலகை சார்ந்த பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். விஜய் சேதுபதி, அனிருத், சிம்பு, உதய நிதி உட்பட பலரும் கலந்து கொண்டனர். அப்போது உதயநிதி மேடையில் பேசுகையில், “ நான் கமல் சாரை பார்த்து வளர்ந்தவன், எப்படி நடிக்க வேண்டும் என்று அவரை பார்த்துக் கற்றுக் கொண்டவன்” நான் இந்த படத்தை அவரை மிரட்டி வாங்கியதாக கூறினார்கள், ஆனால் யாரும் அவரை மிரட்டவும் முடியாது, யாருக்கும் அவர் பயப்படவும் மாட்டார் எனக் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், “ கமலிடம் ஒரு கோரிக்கை வைத்தார், சார் நீங்கள் அரசியலுக்கும் வந்து விட்டீர்கள், ஆனால் அதையும் தாண்டி வருடத்திற்கு ஒரு படமாவது பண்ணுங்கள்” எனக் கேட்டுக் கொண்டார். கிட்டத்தட்ட 4 வருடங்கள் கழித்து இந்த படம் வெளியாவது ரசிகர்கள் மட்டுமல்லாது திரைப்பிரபலங்கள் மத்தியிலும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.