ஊருக்குதான் உபதேசம்! உள்ள ஒரே அழுக்கு - உதயநிதி செஞ்ச வேலையால் கதி கலங்கி நிற்கும் தயாரிப்பாளர்
தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் திரையில் வெளியாகும் பெரிய பெரிய படங்களை எல்லாம் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் வாங்கி வெளியிடுகின்றது. குறிப்பாக டாப் ஹீரோக்களாக இருக்கும் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்றவர்களின் படங்களை ரெட் ஜெயண்ட் தான் வெளியிட்டு வருகின்றது.
இதனால் சிறு பட தயாரிப்பாளர்கள் மிகுந்த வேதனையில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும் வகையில் அதற்கான உண்ணாவிரதத்தில் உதய நிதி ஸ்டாலின் தீவிரமாக இறங்கினார்.
இதையும் படிங்க : தூக்கிட்டு வாங்கடா அந்த செல்லத்தை! ரஜினி படத்தின் அடுத்த வில்லன் இவர் தான்!
இதை குறிப்பிட்டு ஒரு தயாரிப்பாளர் ‘தாழ்த்தப்பட்டவர்களுக்காக இந்த அளவுக்கு உருகி உருகி பேசும் உதய நிதி அவரின் ரெட் ஜெயண்ட் மூலமாக சிறு பட தயாரிப்பாளர்களின் நிலைமை என்ன ஆகிக் கொண்டிருக்கிறது என யோசித்தாரா?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு பம்பர் என்ற திரைப்படம் வெளியானது. வந்த தமிழ் படங்களிலேயே அந்தப் பம்பர் திரைப்படம் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படமாம். அதே நேரத்தில் தான் மாவீரன் படம் வெளியாகியிருக்கிறது.
மாவீரன் பட ரிலீஸால் ஏற்கெனவே ஓடிக் கொண்டிருந்த பம்பர் திரைப்படத்தை தூக்கி விட்டார்களாம். இதனால் நல்ல கதைக்கு உள்ள முக்கியத்துவம் குறைந்து விடுகின்றது. இப்படி 90சதவீதம் திரையரங்குகளை ரெட் ஜெயண்டே ஆக்கிரமித்துக் கொள்கின்றன.
இதையும் படிங்க: ஏலே இருங்கல மண்ட சூடாகுது… கேட்கவே ஜோரா இருக்கும் தளபதி 68 கதை… ஆனா நடக்குமா?
மீதமுள்ள 10 சதவீதத்தில் தான் மற்ற சின்ன படங்கள் ஓடுகின்றன. இப்படியே போனால் நடிக்க வரும் ஆசையில் இருக்கும் புதுமுக நடிகர்கள் , புதுமுக இயக்குனர்கள் , அதை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் என இவர்களின் வாழ்வாதாரமே கேள்விக் குறியாகி விடும் என புலம்புவதாக வலைப்பேச்சு பிஸ்மி கூறினார்.