ரெட் ஜெயண்டை இவனுங்க கிட்ட இருந்து முதல்ல காப்பாத்தனும்!..விஷால் , ஆர்யாவை பாத்து மிரண்டு போன உதய நிதி!..அப்படி என்ன பண்ணாங்க?..
இன்றைய சூழலில் மிகவும் டிரெண்டாகி வரும் வீடியோ நடிகரும் எம்.எல்.ஏ.வுமான உதய நிதி ஸ்டாலின் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டிதான் மிகவும் வைரலாகி வருகிறது. இப்படியும் ஒரு மனுஷன் இந்த அளவுக்கு வெளிப்படையாக பேசுவாரா என அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
சினிமா பயணம்
ஆரம்ப காலங்களில் சில படங்களே தயாரித்து வந்த நிலையில் ஒரு சில இயக்குனர்களின் உந்துதலாக நடிக்க வந்தவர் தான் உதய நிதி. இவர் நடிக்க வருவது அவரது தாயாரான துர்கா ஸ்டாலினுக்கு விருப்பம் இல்லை என்றாலும் தந்தையும் முதலமைச்சருமான ஸ்டாலின் சும்மா நடி, பார்த்துக் கொள்ளலாம் என்று ஒரு தைரியத்தை ஊட்டியிருக்கிறார்.
இவரின் தயாரிப்பில் வெளிவந்த ‘ஆதவன்’ திரைப்படம் , கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம்.இந்த படத்தில் கடைசி ஒரு காட்சியில் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார் உதய நிதி. இது தான் அவர் அடியெடுத்து வைத்த முதல் திரைப்படம். அதன் பின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
பல படங்கள் விநியோகம்
ஓகே ஓகே படத்திற்கு பிறகு இவரின் நகைச்சுவை மீிண்டும் பல படங்களில் நடிக்க உதவியது. தொடர்ந்து ஹுயூமரான படங்களே பண்ணிக் கொண்டிருந்த நிலையில் போர் அடித்து விட்டது என்ற ஒரே காரணத்தால் மாமன்னன், சைக்கோ, நெஞ்சுக்கு நீதி போன்ற வித்தியாசமான படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். அதே வேளையில் அந்த படங்களை அவரே தயாரித்து வெளியிட்டார்.
மேலும் பல படங்களை விநியோகம் செய்யும் உரிமையையும் பெற்றார். சமீபகாலமாக திரைக்கு வரும் படங்களின் உரிமையை உதயநிதியே வாங்கிக் கொண்டிருக்கிறார். அதற்கு காரணம் அவர் காட்டும் நேர்மை என்று பல பேர் சொல்ல கேட்டிருக்கிறோம். சரியான வரவு செலவு கணக்குகளை காட்டி வருகிறார் என்பதே முதல் காரணமாக கொள்ளப்படுகிறது.
இதையும் படிங்க : “இவனை வச்சி படம் எடுத்தா நஷ்டம்தான்”… சொந்த தந்தையாலேயே ஓரங்கட்டப்பட்ட முரளி… ஆனால் அங்கதான் ஒரு டிவிஸ்ட்…
நண்பர்களால் வந்த சோதனை
திரையுலகில் உதய நிதிக்கு மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருப்பவர்கள் நடிகர் ஆர்யா மற்றும் நடிகர் விஷால். இவர்களின் கூட்டணி சிரிக்க வைக்காதவர்களை கூட சிரிக்க வைக்கும். அந்த அளவுக்கு நக்கல், நயாண்டி மன்னர்களாகவே வலம் வருபவர்கள். ஆர்யா நடிப்பில் படு மொக்கை வாங்கிய படம் ‘கேப்டன்’. இந்தப் படத்தின் உரிமையை கூட ரெட் ஜெயண்ட் தான் வாங்கியிருந்தது. அதை வாங்க வைக்க ஆர்யா காட்டிய பில்டப் இருக்கே? ‘படம் நல்லா வந்திருக்கு, நீங்க தான் ரிலீஸ் செய்யனும், ஏலியன் கதை, இதுவரை எடுத்ததிலேயே வித்தியாசமான படம்’ இது தான் அந்த பில்டப்.
நம்பி படத்தை வெளியிட்டார். அதுவும் மாரி செல்வராஜ் கூட உட்கார்ந்து படம் பார்த்திருக்கிறார் உதய நிதி. படத்தை பார்த்து மாரி செல்வராஜும் உதய நிதியும் நொந்தது தான் மிச்சமாம். படம் பார்த்து போன் பண்ணுங்கள் என்று சொன்னாராம் ஆர்யா. ஆனால் போன் பண்ணல என்று உதய் கூறினார்.கொஞ்சம் விட்டிருந்தால் ரெட் ஜெயண்ட ஓரங்கட்டிருப்பான் என்று தோணியில் கூறினார் உதய். மேலும் ஒரு டின்னரில் தான் பார்த்தேன். பார்த்ததும் ஆர்யாவிடம் யோவ்! என்னய்யா படம் அது? இதுக்கு நீ predator படத்தை அப்படியே எடுத்து வைச்சிருக்கலாம்லனு கூறியதாக உதய மிகவும் வெளிப்படையாக கூறினார்.
அதன் பின் விஷால் நான்கு நாளைக்கு முன் போன் பண்ணி லத்தி படம் முடிஞ்சுருச்சுனு சொல்ல அதற்கு உதய் ‘இப்போ அதுக்கு என்ன?’ என்று கூறி கிண்டலாய் சிரிச்சார். இல்ல படத்தை ஒரு தடவை நீ பார்க்கனும்னு விஷால் கூப்பிட்டிருக்காரு, அவர் என்ன சொல்ல போறாரோ என்று பயத்திலேயே செமயாய் பேசி கலாய்த்து தள்ளினார்.