மேடையில் ஒரு குட்டி ஸ்டோரி சொன்ன உதயநிதி!.. ஸ்டோரியை கேட்டு ஷாக் ஆன ஸ்ரீகாந்த்.. அப்படி என்ன மேட்டரு?..
சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கண்ணை நம்பாதே’ படத்தின் ஆடியோ விழா நடைபெற்றது. அந்த விழாவில் உதயநிதி, நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் பிரசன்னா, நடிகை ஆத்மிகா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இவர்கள் எல்லாரும் அந்தப் படத்திலும் நடித்திருக்கின்றனர்.
உதயநிதிக்கு ஜோடியாக ஆத்மிகா இந்தப் படத்தில் நடித்திருக்கிறாராம். 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரானா, உதயநிதியின் அரசியல் பயணம் என பல காரணங்களால் 4வருடங்களாக இழுக்கப்பட்டு ஒரு வழியாக படம் முடிந்து வருகிற 17 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
வழக்கமான நையாண்டி
விழாவில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி எப்பொழுதும் போல தனது கிண்டல் பேச்சுக்களால் மேடையை அலங்கரித்தார். நடிகை ஆத்மிகாவை பற்றி கூறும் போது ‘ஆத்மிகா இந்தப் படத்திற்குள் வரும் போது 12 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். ஆனால் இப்போது கல்லூரி படிப்பே முடிந்து பெரிய ஆளாக இருக்கிறார்’ என்று கூறினார்.
அதுமட்டுமில்லாமல் நடிகர் ஸ்ரீகாந்தை பற்றி கூறும் போது ஒரு குட்டிக் கதையை சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்தார். அதாவது 2002 ஆம் ஆண்டு உதயநிதிக்கு திருமணமாம். அப்போது அழைப்பிதழை கொடுக்க ஸ்ரீகாந்திற்கு போன் செய்து எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார் உதயநிதி. ஆனால் அவர் நினைத்த ஸ்ரீகாந்த் கிரிக்கெட்டில் மூத்த வீரரான ஸ்ரீகாந்தை. அவரும் உதயநிதியும் நல்ல நண்பர்களாம்.
ஷாக் ஆன உதயநிதி
ஸ்ரீகாந்த் வீடு இருக்கும் இடம் உதய நிதிக்கும் தெரியுமாம். ஆனால் போனில் வேறொரு ஏரியா பெயரை குறிப்பிட்டு வரச்சொல்லியிருக்கிறார் ஸ்ரீகாந்த். அப்பவே உதய நிதிக்கு சந்தேகம் இருந்ததாம். இருந்தாலும் அவர் சொன்ன இடத்திற்கு போனதும் மறுபடியும் போன் செய்து வந்து விட்டேன் எங்கு இருக்கிறீர்கள்? என கேட்டாராம். அப்போது ஸ்ரீகாந்த் ஆஸ்கார் ரவிச்சந்திரன் அலுவலகம் மேல இருக்கு பாருங்க, அங்க வாங்க என்று சொல்லியிருக்கிறார்.
அப்போது உதயநிதி ‘இவருக்கு ஆஸ்கார் ரவிச்சந்திரன் அலுவலகத்தில் என்ன வேலை இருக்கு?’ என்று யோசித்துக் கொண்டே மேலே ஏறியிருக்கிறாரு. அங்க போய் பார்த்தால் நடிகர் ஸ்ரீகாந்த் இருந்தாராம். அப்பதான் அவருக்கு தோணுச்சாம், நம்பர் மாத்தி அடிச்சுட்டோம் என்று. இருந்தாலும் ஸ்ரீகாந்திற்கும் அழைப்பிதழை வைத்து விட்டு வந்தாராம் உதயநிதி.
இதையும் படிங்க : எம்ஜிஆரை விட எனக்கு அதான் முக்கியம்!.. வந்த வாய்ப்பை தட்டிக் கழித்த வில்லன் நடிகர்..
இதை மேடையில் உட்காந்திருந்த ஸ்ரீகாந்த் கேட்டுவிட்டு ‘அப்போ நீங்கள் எனக்கு பத்திரிக்கை வைக்க வரலையா?’ என்று மிகவும் ஷாக்காக கேட்டார்.