More
Categories: Cinema News latest news

நாங்க என்னடா துரோகம் செஞ்சோம்!.. பாலிவுட் சீரழித்த தமிழ் சூப்பர் ஹிட் படங்கள்!..

பாலிவுட்டிற்கும் கோலிவுட்டிற்கும் இடையே இந்த அளவு ஒரு நெருக்கம் இருக்கிறது என்றால் ரீமேக் என்கிற பெயரில் அங்கு இருந்து தமிழ் மொழிகளில் ரீமேக் செய்யப்படுவதும் இங்கு இருந்து ஹிந்தியில் சில படங்கள் ரீமேக் செய்யப்படுவதனாலேயாகும். ஏராளமான படங்கள் இப்பொழுது தமிழில் இருந்து பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுகிறது.

சமீபத்தில் கூட கார்த்தியின் நடிப்பில் வெளிவந்த கைதி படத்தையும் அஜித் நடிப்பில் வெளிவந்த வீரம் படத்தையும் ஹிந்தியில் ரீமேக் என்கிற பெயரில் எடுத்து சொதப்பி வைத்தனர். கைதி படத்தை போலா என்ற பெயரில் பெரிய சூலாயுதத்தை அஜய் தேவ்கானிடம் கொடுத்து மீம்ஸ்க்கு உதவி செய்தனர் படக்குழு.

Advertising
Advertising

chinnathambi

அதே போல் வீரம் ஹிந்தி ரீமேக்கில் சல்மான்கானுக்கு பெரிய அளவிலான முடியுடன் ஏதோ நான் கடவுள் ஆர்யா கெட்டப்பில் வந்து படத்தையே துவம்சம் செய்திருக்கிறார். இப்படி பல 90’ஸ் படங்கள் ஹிந்தியில் பாடையேறியிருக்கின்றன. அந்த வகையில் பிரபுவின் நடிப்பில் பட்டி தொட்டியெல்லாம் சக்கப் போடு போட்ட சின்னத்தம்பி படத்தை ரீமேக் செய்து படுகேவலப்படுத்தியிருந்தனர்.

அதே போல் விஜயின் நடிப்பில் யாராலும் இன்றளவும் மறக்க முடியாத படமாக பூவே உனக்காக படம் விஜயின் கெரியரிலேயே ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய படமாக விளங்கியது. அந்த படத்தில் காதலின் அருமையை குடும்பத்தின் அருமையை அழகாக விளக்கியிருப்பர். ஆனால் அதே படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து விஜய்க்கு பதிலாக நடித்தவர் அனில் கபூர். அப்போது அனில் கபூருக்கு 40 வயது. அந்த வயதில் விஜயின் கதாபாத்திரத்தை என்ன அழகாக பண்ணியிருப்பார் என்று யூகிக்க முடிகின்றது.

poove uankkaga

அதே போல் 90’ஸ் கிட்ஸ்களில் ,மறக்க முடியாத படமாக எது என்று கேட்டால் அவர்கள் லிஸ்டில் கண்டிப்பாக சூர்யவம்சம் படம் இருக்கும். அந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து அதில் சரத்குமார் கதாபாத்திரத்தில் அமிதாப் நடிக்க அவரின்  பாவமான முகத்திற்கு அந்த கேரக்டர் சுத்தமாக செட்டே ஆகலை என்று தான் சொல்ல வேண்டும்.

இதையும் படிங்க : ஹீரோ யார்ன்னு சொல்லாமலே கதாநாயகியை படப்பிடிப்புக்கு அழைத்து வந்த பாரதிராஜா… எல்லாத்துக்கும் பாக்யராஜ்தான் காரணமே!!

மேலும் இளசுகளை காதல் கிறுக்கர்களாக மாற்றிய படம் விண்ணைத்தாண்டி வருவாயா. அந்தப் படத்தை பார்க்கும் போதே நாம் முன்பு காதலித்த எண்ணங்கள் யாவும் நம் கண்முன் வந்து நிற்கும். அந்த அளவுக்கு கௌதம் அழகாக சித்தரித்திருப்பார். ஆனால் அந்த படத்தை கௌதமே ஹிந்தியில் எடுத்து அதாள குழியில் கொண்டு போய் சேர்த்தார் என்று தான் சொல்ல வேண்டும். த்ரிஷாவின் கதாபாத்திரத்தில் ஹிந்தியில் ஏமி ஜாக்ஸன் நடிக்க அம்மணி ரொமான்ஸுக்கு சுத்தமாக செட் ஆகவில்லை.

suryavamsam

Published by
Rohini

Recent Posts