விஜய் பார்க்கும் ‘வி’ சென்டிமென்ட்… அப்படிப் பார்த்தா அது எப்படி செட்டாகும்?

Published on: September 13, 2024
vijay
---Advertisement---

வலைப்பேச்சு அந்தணன் விஜய் குறித்து சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

இப்போ த.வெ.க. முழுக்க முழுக்க ‘வி’ ல தான் போய்க்கிட்டு இருக்கு. ஒரு விஷயம் பண்ணினா கூட ‘வி’ ல தான் போகுது. அதே மாதிரி விழுப்புரம், விக்கிரவாண்டி, விஜய். தேமுதிக கேப்டன் விஜயகாந்த் கூட விருதாச்சலம் நின்னு ஜெயிச்சாருன்னு ஆங்கர் சொல்றாரு.

அதற்கு கடவுள் நம்பிக்கை. அதுல ஒண்ணும் தப்பில்ல. ஆனா முரட்டு நம்பிக்கையா வந்துடக்கூடாது. அது மூடநம்பிக்கையா ஆகிடக்கூடாது. அதிமுக காலத்துல இருந்தே பார்க்குறோம். அவங்க யாகம், பூஜைன்னு நிறைய பண்ணினாங்க. ஆடு கூட பலியிடக்கூடாதுன்னு அதனால தான் தடை போட்டாங்க. ஆனா கடைசில அவங்க என்ன ஆனாங்கங்கறதையும் நாம பார்க்குறோம்.

vijay4

அப்போ ஆன்மிக நம்பிக்கை தேவை. அது ஒரே அடியா மூடநம்பிக்கையாக ஆகிடக்கூடாது. நியூமராலஜில வி வி வி வருதுன்னாங்க. அது எண்ல பார்த்தா 6. மூணு 6 போட்டீங்கன்னா அது சாஸ்தாவோட அடையாளம். அப்போ அது எப்படி உங்களுக்கு செட்டாகும்?என்கிறார் அந்தணன்.

கோட் படத்துல விஜயகாந்தை அவராகவே காமிச்சிருக்கலாம். ஆனா நானும் அவரும் வேறல்லங்கற மாதிரி காமிச்சிட்டாங்க. எனக்குள்ள தான் விஜயகாந்த் இருக்காருன்னு சொல்லாம சொல்லிட்டாரு. அவங்க ரசிகர்கள் எல்லாரும் யாருக்கு ஓட்டுப் போடுவாங்க. அதே மாதிரி சிவகார்த்திகேயன் ரசிகர் எல்லாம் யாருக்கு ஓட்டுப் போடுவாங்க என கேள்வியை எழுப்புகிறார் அந்தணன்.

விஜய், சிவகார்த்திகேயன் மீது வைத்திருக்கும் பாசம், அன்பு, நம்பிக்கை என நிறைய விஷயங்களை எடுத்துக்கலாம். நடிகர் கூட்டத்துல அவர் கவனிச்சிக்கிட்டே இருக்காரு. அதுல யாரு பிரைட்டா இருக்காங்களோ அவரு கையில துப்பாக்கியைக் கொடுத்துட்டாரு. அது அவசியமில்லாத ஒரு வேலை.

Also read: அஜித்தை நான் கடவுளா பார்க்குறேன்! மூத்த நடிகையே இப்படி சொல்றாங்களே

அவரு இன்னைக்கு சாதாரண இடத்துல இல்லை. நாளைக்கு அஜீத்தையே கூப்பிட்டு சிவகார்த்திகேயன் வச்சிக்கிட்டு என் இடத்துல நீ இருக்கேன்னு சொன்னாலும் தவறு தான். அஜீத்தோ, விஜயோ இன்னைக்கு அவ்வளவு சீக்கிரத்துல இந்த இடத்துக்கு வரல.

சிவகார்த்திகேயன் அந்த இடத்துக்குத் தகுதியா என்றால் தகுதிதான். ஆனா அவ்வளவு சீக்கிரம் கிடையாது. மேற்கண்ட தகவலை பிரபல வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.