சொன்னது ஒன்னு!.. பாலா செஞ்சது ஒன்னு.. கண்ணீர் விடும் பிதாமகன் தயாரிப்பாளர்...
கடந்த சில வருடங்களாகவே சமூக வலைத்தளங்களில் குறிப்பாக யுடியூப்பில் அதிகமாக கண்ணில் படுவது பிதாமகன் பட தயாரிப்பாளர் துரையின் புலம்பல் வீடியோக்கள்தான். என்னம்மா கண்ணு, பொல்லாதவன், லூட்டி, பிதாமகன், கஜேந்திரா ஆகிய திரைப்படங்களை தயாரித்தவர்தான் இந்த வி.ஏ.துரை.
25 வருடங்களுக்கும் மேல் திரைத்துறையில் இருக்கிறார். பல திரைப்படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்துள்ளார். இதில், பல ரஜினி படங்கள் அடக்கம். ரஜினியோடு நல்ல நட்பில் இருந்தவர். தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்த அனுபவத்தில் சொந்தமாக படங்களை தயாரிக்க துவங்கியவர். அங்குதான் அவருக்கு ஏழரை துவங்கியது.
சத்தியராஜை வைத்து இவர் எடுத்த என்னம்மா கண்ணு, லூட்டி உள்ளிட்ட 3 படங்கள் அவருக்கு லாபத்தை கொடுத்தது. அப்போதுதான் பாலா அவரை சந்தித்துள்ளார். இதுபற்றி பேட்டியில் கூறியுள்ள விஏ துரை ‘பாலா மீது துரைக்கு என்பக்கு நல்ல அன்பும்,மரியாதையும் இருந்தது. பிதாமகன் கதையை இரண்டு வரிகளில் கூறினார். விக்ரம், சூர்யா நடிப்பதாகவும் நான்கரை கோடியில் எடுத்து முடித்து தருகிறேன் எனவும் கூறினார். ஆனால், படத்தை பல நாட்கள் எடுத்து ரூ.14.5 கோடியில் முடித்தார். படம் சூர்யாவுக்கும், விக்ரமுக்கும், பாலாவுக்கும் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.
ஆனால், நான் கடனாளியாக மாறினேன். அந்த கடனை அடைக்க மேலும் சில படங்கள் எடுத்து அதுவும் தோல்வியில் முடிந்தது. அதன்பின் என்னை சந்தித்த பாலா மேலும் ஒரு படத்தை செய்து தருவதாக கூறி ரூ.25 லட்சம் பணம் வாங்கினார். நான் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருந்ததால் அவரிடம் அந்த பணத்தை திருப்பி கேட்டேன். அதற்கு பாலா ‘உங்களிடம் எப்போது பணம் வாங்கினேன்?’ என கேட்டு எனக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
தற்போது சூர்யா, வெற்றிமாறன் ஆகியோர் எனக்கு உதவி செய்தனர். ரஜினி எனக்கு உதவி செய்வார் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என வி.ஏ.துரை அந்த வீடியோவில் பேசியிருந்தார்.
அவர் கூறியது போலவே ரஜினி அவருக்கு உதவுவதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.