பாலாவை மலையிலிருந்து தள்ளிவிட பார்த்த பிதாமகன் தயாரிப்பாளர்!.. அட இது எப்ப நடந்தது தெரியுமா?...
இயக்குனர் பாலாவுக்கு என தனி ரசிகர் கூட்டம் இருந்த காலம் உண்டு. அவரின் சேதுவை பார்த்துவிட்டு அவருக்கு பல ரசிகர்கள் உருவானார்கள். நந்தா திரைப்படத்தை பாலாவுக்காகவே பார்த்த ரசிகர்கள் இருக்கிறார்கள். அதன்பின் பிதாமகன், நான் கடவுள் என அவர் இயக்கிய படங்கள் பாலாவை ஒரு சிறந்த இயக்குனராக காட்டியது. அவரின் படங்களுக்கு விருதும் கிடைக்கும். மணிரத்தினமே நான் பாலாவின் ரசிகன் மேடையில் பேசினார். எல்லாம் சரிதான். ஆனால், அவரின் திரைப்படங்கள் தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்ததால் என்றால் அது இல்லை என்றே சொல்லலாம்.
கூறிய பட்ஜெட்டை விட அதிக பட்ஜெட்டில் படம் எடுப்பது, தயாரிப்பாளருக்கு முழு கதையை சொல்ல மாட்டார், படப்பிடிப்பு தளத்திற்கு தயாரிப்பாளர் வந்தால் படப்பிடிப்பை நிறுத்திவிடுவார், எடுத்த காட்சிகளையே மீண்டும் மீண்டும் எடுத்து நடிகர்களை கதற விடுவது, பல மாதங்கள் படப்பிடிப்பு நடத்தி தயாரிப்பாளரை கதறவிடுவது என்பதுதான் பாலாவின் ஸ்டைல். அதனால்தான் கடந்த சில வருடங்களாக எந்த தயாரிப்பாளர்களும் பாலாவை வைத்து படம் எடுக்க முன்வரவில்லை.
அதோடு, பாலா தன்னை காலி செய்துவிட்டதாக பிதாமகன் பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை கொடுத்த பேட்டிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நான்கரை கோடியில் படம் எடுப்பதாக கூறி 14 கோடியில் முடித்து தன்னை பாலா கடனாளி ஆக்கிவிட்டார். மேலும், ஒரு புதிய படத்திற்காக நான் கொடுத்த 25 லட்சம் அட்வான்ஸ் தொகையையும் திருப்பிக்கொடுக்கவில்லை என்பதுதான் அவர் கூறும் புகாரின் சாராம்சம்.
இதற்கிடையில் பல வருடங்களாக சினிமா துறையில் இருக்கும் பத்திரிக்கையாளர் ஒருவர் ஒரு முக்கிய தகவலை ஒரு பேட்டியில் கூறியுள்ளார். பிதாமகன் படப்பிடிப்பு தேனியில் நடைபெற்று கொண்டிருந்த போது பாலா செலவுகளை இப்படி இழுத்துவிட்டாரே என்கிற கோபத்தில் இருந்த வி.ஏ.துரையும், அவரின் நண்பரும் மலைக்கு மேலே போய் பாலாவை மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட வேண்டும் என்கிற கோபத்தில் சென்றார்களாம். அவர்களை பார்த்த பாலா ‘இங்கே எதற்கு வந்தீர்கள்?.. நீங்கள் இருந்தால் நான் படப்பிடிப்பை நடத்த மாட்டேன்’ என கோபமாக கூற வி.ஏ.துரையும் அவரின் நண்பரும் கீழே வந்துவிட்டார்களாம்.
தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு சினிமா துறையினரிடம் கையேந்தி நிற்கும் நிலைக்கு வி.ஏ.துரை தள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 14 நாள்களை விழுங்கிய நாட்டு நாட்டுப் பாடல்..! பென்டைக் கழற்றிய டான்ஸ் ஸ்டெப்கள்…!! ஒரு பார்வை