இந்தப்படத்தில் இத்தனை அம்சங்களா...?! அட...இது தெரியாமப் போச்சே...!

by sankaran v |   ( Updated:2023-02-05 05:28:28  )
இந்தப்படத்தில் இத்தனை அம்சங்களா...?!  அட...இது தெரியாமப் போச்சே...!
X

Va quater cutting1

வ.குவாட்டர் கட்டிங்...... படத்தின் தலைப்பே நம்மை வாந்தி எடுக்க வைத்து விடும் போல. இப்படி தலைப்பால் பலரும் படத்திற்கு ரசிகர்களை ஈர்ப்பார்கள். ஆனால் படத்தில் ஒன்றும் இருக்காது. ஆனால் இது கொஞ்சம் புதுசு. இந்தப்படமும் அதே வித்தையைத் தான் கையாண்டுள்ளது.

va q2

ஆனால் படத்திலும் ரசிகர்களின் ரசனைக்குத் தீனி போடும் வகையில் பல விஷயங்கள் உள்ளன. ஆனால் ரசிகனின் உலகத்தர ரசனையின் குறைவால் இந்தப்படம் பெரிதும் ஈர்க்கப்படவில்லை. இனி இந்தப்படத்தின் சிறப்பம்சங்களைப் பற்றிப் பார்ப்போம்.

இயக்குனர் புஷ்கர் மற்றும் காயத்ரி எழுதி இயக்கிய படங்கள் 3. அவற்றில் விக்ரம் வேதா, ஓரம்போ, வ.குவாட்டர் கட்டிங் ஆகிய படங்கள். இவற்றில் சிறந்த படம் வ.குவாட்டர் கட்டிங்.

தமிழ்ப்படங்களில் இப்படி ஒரு படைப்பா என பார்த்து வியந்த படம். தமிழ் ரசிகர்கள் மத்தியில் உலக சினிமா ரசனை மற்றும் புரிதல் இல்லாத காரணத்தால் இந்தப்படம் பெரிய வெற்றியை அடையவில்லை. வணிகரீதியாக தோல்வியும் அடையவில்லை. இந்தப்படத்தில் புதுவித காமெடி கையாளப்பட்டுள்ளது.

va q

இந்தப்படத்தில் டுவிஸ்ட் யாரும் எதிர்பார்க்காத வகையில் இருக்கும். கதை அமைப்பு, எடிட்டிங், டிசைன், வசனம், கதாபாத்திர அமைப்பு என அனைத்தும் இந்தப்படத்தில் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளன. படத்தில் ரெட், கிரீன் கலர் டோன் செட்டிங், டுயல் ரோல், திரைக்கதை என அனைத்தும் ரசிகர்களுக்குப் புதுவிருந்து படைக்கும்.

ஒரே சமயத்தில் வெவ்வேறு இடங்களில் நடக்கும் சம்பவங்களைப் படத்தின் தனித்தனியாகக் காட்டியிருப்பார்கள். அதன்பிறகு அனைத்துக் காட்சிகளையும் ஒரே புள்ளியில் இணைத்து அருமையான திரைக்கதையைக் கொண்டு வந்திருப்பார்கள். படத்தில் இளைஞர்களின் ரசனைக்கு விருந்தாக இரட்டை அர்த்த வசனங்கள் ததும்பி வழியும்.

இது ஒரு வித்தியாசமான படம் என்றால் மிகையில்லை. இன்னும் பல ஆண்டுகள் கழித்து தமிழ்த்திரை உலகில் இது சிறப்பான படம் என்று கொண்டாடப்படும். படத்தில் 2டி கார்டூன் வடிவில் எழுத்து போடும் போது கதை சொல்லப்படும்.

Va quater cutting

லாரியில் வரும் மாணிக்கவிநாயகம் 6 பாடல்களைப் பாடி அசத்தியிருப்பார். இந்தப் பாடல்களே நாயகன் சிவா எப்படிப்பட்டவர் அவர் எந்த சூழ்நிலையில் உள்ளார் என்பதைத் தெள்ளத் தெளிவாக விவரிக்கிறது.

2010ல் வெளியான இந்தப் படத்தில் எடுத்தாளப்பட்ட காமெடி நியோ நார் வகையைச் சேர்ந்தது. சிவா, லேகா வாஷிங்டன், எஸ்.பி.பி.சரண், கல்யாண், ஜான் விஜய், அபிநயஸ்ரீ உள்பட பலர் நடித்துள்ளனர். மதுவிற்காக அலையும் ஒரு இளைஞனின் கதை தான் படம். படத்தில் நீரவ்ஷா புதுமையான ஒளிப்பதிவு யுக்தியைக் கையாண்டுள்ளார். அதாவது படம் முழுவதும் சிவப்பும், பச்சையும் தான் வரும்.

காட்சிதோறும் படத்தில் வரும் சுவர் ஓவியங்களும், கலை வடிவமைப்பும் ரசிகர்களைக் கவரும் விதத்தில் இருப்பது படத்தின் தனிச்சிறப்பு. படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை, மெரினா பீச் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளன. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார்.

Next Story