vaathiyar
கார்த்தி நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த திரைப்படம் வா வாத்தியார். அந்த படம் நாளை ரிலீஸ் ஆக இருந்த நிலையில் திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஒரு வழியாக படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று படம் நாளை ரிலீசுக்கு தயாராக இருந்தது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் சொத்து ஆட்சியர் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தரதாஸ் என்பவர் திவால் ஆனவர் என கடந்த 2014 ஆம் ஆண்டு அறிவித்து அவருடைய சொத்துக்களை அவருக்கு பதிலாக சொத்து ஆட்சியர் ஒருவரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. திவாலான சுந்தரதாஸிடம் இருந்து ஸ்டுடியோ கிரீன் பட நிறுவனம் 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார்கள்.
அந்தத் தொகை இப்போது வட்டியுடன் சேர்த்து 21 கோடியை 78 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயாக உள்ளது. அதனால் அந்தத் தொகையை திரும்ப செலுத்த ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் திரும்ப செலுத்தும் வரை அவர் தயாரித்த வா வாத்தியார் திரைப்படம் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் படம் மூலம் கிடைக்கும் வருவாயை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சொத்து ஆட்சியர் மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்து வா வாத்தியார் திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடைவிதித்து ஞானவேல் ராஜா எப்போது கடன் தொகையை செலுத்துவார் என பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இதன் மூலம் ஞானவேல் ராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மூன்று கோடியே 75 லட்சம் ரூபாயை 24 மணி நேரத்தில் செலுத்துவதாகவும் மீதமுள்ள தொகைக்கான சொத்த ஆவணங்களை தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார்.
ஆனால் ஏற்கனவே ஞானவேல் ராஜாவுக்கு போதுமான கால அவகாசம் கொடுத்து விட்டதாக நீதிபதிகள் கூறியிருந்தனர். அதனால் அவர் தொகையை திரும்ப செலுத்தும் வரை இந்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் வா வாத்தியார் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தள்ளி போயிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அதுவும் அமெரிக்க விநியோகஸ்தர்களிடமிருந்து இந்த தகவல் வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதன் மூலம் இந்த மாதம் எந்த ஒரு பெரிய படமும் வெளிவர வாய்ப்பு இல்லை. அதனால் இந்த வருடம் ஒரு மோசமான வருடமாகவே முடிந்திருக்கிறது. அதுவும் இந்த மாதம் பல நல்ல தேதிகள் இருக்கின்றன. கிறிஸ்துமஸ், குழந்தைகளுக்கு அரையாண்டு விடுமுறை இப்படி இருக்கும் பட்சத்தில் எந்த ஒரு கிளாஸும் இல்லாமல் இப்படி முடிந்து விட்டது என நெட்டிசன்கள் நொந்து வருகின்றனர்.ஆ
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…
நடிகர் விஜயகாந்துக்கும்…