தமிழ் சினிமாவில் சூது கவ்வும் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நலன் குமாரசாமி. இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே கவனிக்கப்பட்டார் நலன் குமாரசாமி. அதன்பின் மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து காதலும் கடந்து போகும் படத்தை இயக்கினார்.
அதன்பின் கார்த்திக்கை வைத்து வா வாத்தியார் என்கிற படத்தை இயக்கினார். ஆனால், கூறியதை விட அதிக நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஒருகட்டத்தில் கார்த்தியே கடுப்பாகி இனிமேல் கால்ஷீட் கொடுக்கமுடியாது என சொல்லுமளவுக்கு சென்றது. அதன்பின் ஒரு வழியாக படத்தை முடித்துவிட்டார்கள்.
காதலும் கடந்து போகும் படம் வெளியாகி 9 வருடங்கள் ஆன நிலையில் அவரின் அடுத்த படமான வா வாத்தியார் வருகிற 12-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் கார்த்திக் ஹீரோவாக நடித்த சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. போலீசே இல்லாத கார்த்தி போலீஸ் போல உடையணிந்து போலீஸ் செய்யும் மத்த எல்லா வேலைகளையும் செய்வது போல காட்சிகள் அதில் இடம்பெற்றிருக்கிறது. டிரெய்லரை பார்க்கும்போது கார்த்திக்கு இப்படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…
நடிகர் விஜயகாந்துக்கும்…
ரசிகர்களால் சூப்பர்ஸ்டார்…
கோலிவுட்டில் உள்ள…