கைவிரித்த கலைப்புலி....பதறிய சூர்யா....டேக் ஆப் ஆகுமா வாடிவாசல்?!....

by Manikandan |
கைவிரித்த கலைப்புலி....பதறிய சூர்யா....டேக் ஆப் ஆகுமா வாடிவாசல்?!....
X

தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானது வாடிவாசல். முதன் முறையாக இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூர்யா இணைந்து உள்ளதால் இப்படத்திற்கு தற்போது அதிக எதிர்பார்ப்பு அதிகமாகி கொண்டே வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டியை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார். இப்படம் பிரமாண்டமாக அதிக பொருட்செலவில் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அதற்கான ஒத்திகை சூட்டிங் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்டமாக ஜல்லிக்கட்டு செட் அமைத்து படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த திரைப்படம் அதிக பட்ஜெட் கொண்டு உருவாகி வருவதால் கலைப்புலி தாணு தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ள்ளாராம்.

இதையும் படியுங்களேன் - ஷூட்டிங்கை பாதியில நிறுத்தி விஜய் செய்த காரியம்.! நடிகை கூறிய ரகசிய தகவல்...

வலிமை எனும் பெரிய பட்ஜெட் திரைப்படத்தை போனிகபூர் தயாரிக்கும் போது, ஜீ ஸ்டூடியோஸ் உடன் இணைந்து தயாரித்து இருந்தார். இதுபோல கலைப்புலி தாணுவும் திரைப்படத்தை ஜீ ஸ்டூடியோ நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளாராம்.

இதன் மூலம் ஜீ ஸ்டூடியோஸ் இதில் பணம் உதவி செய்யும். பின்னர், வலிமை திரைப்படம் போலவே வாடிவாசல் திரைப்படத்திற்கான தொலைக்காட்சி உரிமம் மற்றும் ஓடிடி உரிமம் ஆகியவற்றை ஜீ நிறுவனமே பெற்றுக் கொள்ளும் என கூறப்படுகிறது.

Next Story