Vaadivaasal
வெற்றிமாறன் தற்போது “விடுதலை” திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் பாகம் வருகிற முப்பதாம் தேதி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“விடுதலை” திரைப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் “வாடிவாசல்” திரைப்படத்தை இயக்கவுள்ளார். இதில் சூர்யா நடிக்கிறார் என்பதை பலரும் அறிவார்கள். இத்திரைப்படத்தின் புரோமோ வீடியோ கூட சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
எனினும் “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்த ஒரு முக்கிய தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
அதாவது “வாடிவாசல்” திரைப்படத்தில் நடிக்க இருக்கும் காளை மாடு சூர்யாவிடம் பழக மறுக்கிறதாம். ஆதலால் இது வரை ஒப்பந்தமான படங்களை எல்லாம் முடித்துக்கொடுத்துவிட்டு அந்த காளை மாட்டுடன் பழகுவதற்காகவே சில மாதங்களை எடுத்துக்கொள்ளப்போகிறாராம் சூர்யா. அதன் பிறகுதான் “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என செய்யாறு பாலு அப்பேட்டியில் கூறியுள்ளார்.
பா.ரஞ்சித் யாரும் எதிர்பார்க்காத வகையில் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் 2 ஆம் பாகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டவுடன், இணையத்தில் பலரும் “வடச்சென்னை 2” எப்போது வரும் என கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே போல் “விடுதலை” திரைப்படத்தின் 2 ஆம் பாகம் குறித்த தகவலும் இல்லை. இந்த நிலையில் “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக தாமதமாகவே தொடங்கும் என தெரியவருகிறது.
இதையும் படிங்க: சுந்தர்.சி-ஐ பார்த்தவுடன் காரை நிறுத்திய நாகேஷ்… இயக்குனரின் மனதில் தங்கிப்போன ஒரு சோக சம்பவம்… இப்படி ஆகிடுச்சே!
பொதுவாக பொங்கல்,…
இறுதிச்சுற்று சூரரைப்போற்று…
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…