டேக் ஆப் ஆகும் வாடிவாசல்!.. லண்டன் பறக்கும் வெற்றிமாறன்!.. பரபர அப்டேட்!…

Published on: September 11, 2024
Vaadivaasal
---Advertisement---

Vaadivaasal: தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் பாலு மகேந்திராவின் சிஷ்யன் இவர். இவர் இயக்கிய முதல் திரைப்படம் பொல்லாதவன். தனுஷ் ஹீரோவாக நடித்திருந்த இந்த திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது.

அதோடு, வெற்றிமாறன் கதை சொன்ன விதம் ஷங்கர் போன்ற பெரிய இயக்குனர்களே பாராட்டும்படி இருந்தது. அதன்பின் ஆடுகளம், வட சென்னை, விசாரணை, அசுரன் ஆகிய படங்களை இயக்கினார். 2 முறை தேசிய விருதுகளையும் பெற்றிருக்கிறார். இவரால் தனுஷுக்கு 2 முறை தேசிய விருதும் கிடைத்திருக்கிறது.

இதையும் படிங்க: வேட்டையன் படத்துக்கு அனிருத் போட்ட பக்கா பிளான்…! செமயா ஒர்க் அவுட் ஆகியிருக்கே..!

எனவே, வெற்றிமாறன் இயக்கும் படம் என்றாலே ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடுகிறது. காமெடி நடிகராக இருந்த சூரியை விடுதலை படம் மூலம் ஹீரோவாக மாற்றினார். இப்போது சூரி ஒரு முக்கிய ஹீரோ நடிகராக மாறிவிட்டார். சில வருடங்களுக்கு முன்பு சூர்யாவும் வெற்றிமாறனும் இணைந்து வாடிவாசல் என்கிற படத்தை துவங்கினார்கள்.

மதுரை பின்னணியில் ஜல்லிக்கட்டு தொடார்பான கதை என சொல்லப்பட்டதால் ரசிகர்களிடம் ஆர்வம் அதிகரித்தது. கலைப்புலி தாணு இப்படத்தை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டு ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வாங்கி சூர்யா வீட்டிலேயே அந்த மாட்டோடு பழகியும் வந்தார்.

இதையும் படிங்க: வேட்டையனா, கூலியா எது சிறந்த படமாக இருக்கும்? கழுவுற மீனுல நழுவுற மீனா பதில் சொல்லிட்டாரே..!

ஆனால், இப்போதுவரை படம் துவங்கப்படவே இல்லை. ஏறக்குறை இப்படம் அறிவிக்கப்பட்டு 3 வருடங்களுக்கும் மேல் ஆகிறது. அதன்பின் விடுதலை எடுத்து முடித்துவிட்டு, இப்போது விடுதலை 2 படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இந்நிலையில், வெற்றிமாறனின் அடுத்த படமாக வடிவாசல் உருவாகவிருக்கிறது.

இப்படத்தின் அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் பணிகளை இறுதி செய்வதற்காக வெற்றிமாறன் விரைவில் லண்டன் செல்லவிருக்கிறாராம். இப்படத்தில் வரும் காளை தொடர்பான காட்சிகளை பல லட்சம் செலவில் கிராபிக்ஸில் எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். விடுதலை 2 படம் வருகிற டிசம்பர் மதம் வெளியான பின் வாடிவாசல் படத்தின் வேலைகள் முழுவீச்சில் துவங்கும் என்கிறார்கள்.

இந்த செய்தி சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: இங்கேயும் விட்டுவைக்கலையா உலகநாயகன்… எங்க போனாலும் விதை அவர் போட்டதா தான இருக்கு!

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.