Connect with us

Cinema News

வாலி படத்துக்காக நீதிமன்றம் ஏறிய எஸ்.ஜே.சூர்யா..! இத்தன வருஷம் கழிச்சு என்ன பிரச்னையோ?

SJ Surya Vaali: இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வாலி திரைப்படத்துக்காக மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து விசாரிக்கும் போது, பிரச்னை வேறு விதமாக விஸ்வரூபம் எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

1999ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வாலி. இப்படத்தில் அஜித் குமார் இரட்டை வேடங்களில் நடிக்க, சிம்ரன் நாயகியாக நடித்து இருந்தார். ஜோதிகா இந்த படத்தில் அறிமுகமானார். வாலி படத்தின் ஸ்கிரிப்டை 60 நாட்களில் முடித்தாராம் எஸ்.ஜே.சூர்யா. டிசம்பர் 1997ல் கீர்த்தி ரெட்டி இப்படத்தில் முன்னணி நடிகையாக அறிவிக்கப்பட்டார்.

இதையும் படிங்க: அடங்கப்பா… இப்போவாது மனசு வந்துச்சே… விடாமுயற்சி டீமுக்கு ஷாக் கொடுத்த அஜித்..!

ஆனால் படப்பிடிப்பு தொடங்கும் முன் அவருக்கு பதிலாக சிம்ரன் மாற்றப்பட்டார். ரோஜா மற்றும் மீனா ஆகியோரும் கதாநாயகியாக நடிக்க சூர்யா கதை சொல்லி இருந்தார். ஆனால் இருவராலும் தேதிகளை ஒதுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

என்ஐசி ஆர்ட்ஸின் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரிக்க இசையமைத்தவர் தேவா தான். திரையரங்குகளில் வெளியான இப்படம் 270 நாட்களுக்கு மேல் ஓடியது. இப்படத்தின் இந்தி உரிமையை தயாரிப்பாளர் போனி கபூர் வாங்கி இருந்தார். கதை சூர்யாவுக்கே சொந்தம் எனக் கூறி அவருக்கு எதிராக தான் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.

இதையும் படிங்க: தசாவதாரம் ‘பல்ராம் நாயுடு’ கேரக்டரை கமல் எங்கிருந்து சுட்டார் தெரியுமா?!. அட ஆச்சர்யமா இருக்கே!…

ஆனால் நீதிமன்றம் கதை இயக்குனருக்கே சொந்தம் என்று எந்த ஆவணத்தினையும் எஸ்.ஜே.சூர்யா சமர்பிக்கவில்லை. அதனால் தடையில்லாமல் இடைக்கால அனுமதி வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா நீதிமன்றத்தில் 2 மணி நேரம் சாட்சியம் அளித்தார்.

இதையடுத்து வழக்கு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் சூர்யா ஆஜாராகமல் இருந்தார். இதனால் மீண்டும் வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top